மாஸ்க் போட்டுக்கொண்டு பிஸ்கட் சாப்பிட முடியாமல் தவிக்கும் சிறுமி… நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ!

மாஸ்க் போட்டுக்கொண்டு பிஸ்கட் சாப்பிட முடியாமல் தவிக்கும் சிறுமி… நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ!

உலகையே அச்சுறுத்திக்  கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு சீனாவில் இதுவரை 2,809 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 82,500 க்கும் அதிகமானவர்களைப் பாதித்தக்கப்பட்டுள்ளனர். ‘இப்போது சீனாவில் கொரோனா வைரஸ் ‘உச்சத்தை அடைந்துள்ளது’ என்று உலக சுகாதார அமைப்பு திங்கள் கிழமை தெரிவித்துள்ளது. 

coronavirus-80

சீனாவில் ஃபேஸ்மாஸ்க் அணிந்திருக்கும் ஒரு சிறுமி பிஸ்கட் சாப்பிட முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த சிறுமி பிஸ்கட்டை சாப்பிட முயற்சி செய்யும் போது மாஸ்க் அணிந்திருப்பதால் பிஸ்கட் கீழே உதிர்ந்து விழுகிறது. முகத்தில் மாஸ்க் அணிந்திருப்பதைக் கூட உணர முடியாத அந்த சிறுமி பிஸ்கட் சாப்பிட முடியதை குழப்பத்துடன் பார்க்கிறாள். இதைப் பார்ப்பவர்கள் சிலருக்கு நகைச்சுவையளிக்கிறது.

கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தின் ஹவுஜோவில் ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.  இந்த வீடியோ பல சீன சமூக ஊடக தளங்களில் வைரலாகிவிட்டது, இந்த வீடியோ பலரையும் சிரிக்க வைக்கிறது. கொடிய கொரோனா வைரஸ் சீனாவின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளதால் சீனாவில் மக்கள் முகமூடி அணியாமல் வீடுகளை விட்டு வெளியேறுவதில்லை. 

பலரும் இதை நகைச்சுவையாக பார்த்த போது, சிலர் சீனாவின் மோசமான நிலையைச் சுட்டிக்காட்டி அவர்கள் வாயடைத்தனர். இந்த வீடியோவிற்கு, “ஹாஹா, இந்த சிறுமி வளர்ந்த பிறகு  இந்த வீடியோவைப் பார்த்தால் எப்படி இருக்கும்?” என்று பதிவிட்டிருந்தார். மற்றொருவர், “ஓ அழகான பெண். நீங்கள் இன்று பசியுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்” என்றிருந்தார்.