மாஸ்க், கிளவுஸ் அணிந்து திருமணம் செய்த ஜோடி… வீடியோ காலில் ஆசிர்வாதம்….. கொரோனா புண்ணியத்தால் எளிமையாக நடக்கும் திருமணங்கள்…

 

மாஸ்க், கிளவுஸ் அணிந்து திருமணம் செய்த ஜோடி… வீடியோ காலில் ஆசிர்வாதம்….. கொரோனா புண்ணியத்தால் எளிமையாக நடக்கும் திருமணங்கள்…

குஜராத்தில் நேற்று நடைபெற்ற திருமணத்தில் மணமக்கள் மாஸ்க், கிளவுஸ் அணிந்தபடி கல்யாண சடங்குகளை நிறைவு செய்தனர். வீடியோ காலில் உறவினர்கள் பங்கேற்று புதுமண தம்பதிகளை ஆசிர்வாதம் செய்தனர்.

குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று பூஜா மற்றும் திஷங் என்ற ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. மணமகள் வீட்டில் நடந்த இந்த திருமணத்தில் மொத்தமே 6 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் கல்யாண ஜோடிகள் முகத்தில் மாஸ்க், கைகளில் கிளவுஸ் அணிந்து திருமண சடங்குகளை நிறைவு செய்தனர். புதுமண தம்பதிகளின் இரு தரப்பு உறவினர்களும் வீடியோ கால் வாயிலாக திருமணத்தில் பங்கேற்று மணமக்களை ஆசிர்வாதம் செய்தனர்.

குஜராத்தில் எளிமையாக திருமணம் செய்த ஜோடி

இது குறித்து மணப்பெண் பூஜா கூறுகையில், திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது உண்மையான திட்டம். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுனை மதிக்க வேண்டும் என்பதால் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்தோம். எங்க வீட்டு மொட்டை மாடியில் திருமணத்தை நடத்தினோம்.

லாக்டவுன்

மொத்தமே 6 பேர் அதுவும் எங்களது பெற்றோர்கள் மட்டுமே பங்கேற்றனர். திருமண சடங்குகள் தொடங்குவதற்கு முன்னதாக மாஸ்க், கிளவுஸ், சானிடைசர் வீட்டில் இருப்பதை உறுதி செய்து கொண்டோம். எங்களது இரு தரப்பு உறவினர்களும் வீடியோ கால் வாயிலாக திருமணத்தில் பங்கேற்றனர் என தெரிவித்தார். கொரோனா வைரஸ் காரணமாக இது போன்றுதான் நாட்டின் பல பகுதிகளில் திருமணங்கள் எளிமையாக நடைபெற்று வருகிறது.