மாஸ்க் இல்லாமல் செல்ஃபி எடுத்தால் இத்தனை லட்சம் அபராதமா?

 

மாஸ்க் இல்லாமல் செல்ஃபி எடுத்தால் இத்தனை லட்சம் அபராதமா?

உலகம் முழுவதுமே கொரோனாவின் தாக்குதல் கடுமையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 71 லட்சத்து 72 ஆயிரத்து 352 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 40 லட்சத்து 89 ஆயிரத்து 674 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 99 ஆயிரத்து 644 பேர். அதன் பின்னான அப்டேட் 497 பேர் அடுத்து மரணம் அடைந்துள்ளன. அவற்றையும் சேர்த்தால் 17 லட்சத்தைக் கடந்து விட்டது. தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,13,83,034 பேர். 

மாஸ்க் இல்லாமல் செல்ஃபி எடுத்தால் இத்தனை லட்சம் அபராதமா?

சிலி நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. அதனால், சிலி நாட்டில் மாஸ்க் அணிவது என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை எனும் சட்டம் அங்கு நடைமுறையில் உள்ளது.

மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு 3500 டாலர் அபராதம். அதாவது நமது இந்திய நாட்டின் ரூபாய் மதிப்பில் பார்த்தால் சுமார் 2 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் வரும். இத்தனை லட்சம் ரூபாய் அபராதம் வைத்தும் ஒருவர் மாஸ் அணியாமல் செல்பி எடுத்துள்ளார். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

மாஸ்க் இல்லாமல் செல்ஃபி எடுத்தால் இத்தனை லட்சம் அபராதமா?

அவர் வேறு யாருமில்லை. சிலி நாட்டின் அதிபர் செபாஸ்டியன் பினேரா. அவர் கடற்கரைக்குச் சென்றிருந்தபோது, அங்கு வந்த ஒரு பெண் அவருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். இவரும் அதற்கு சம்மதித்து செல்ஃபி எடுத்திருக்கிறார். அப்போது இருவருமே மாஸ்க் அணிய வில்லை. அதனால், சிலி நாட்டின் அதிபருக்கே அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.