மாஸ்க் அணிவது கட்டாயம்… தவறினால் சட்டப்படி நடவடிக்கை… உ.பி. அரசு அதிரடி….

 

மாஸ்க் அணிவது கட்டாயம்… தவறினால் சட்டப்படி நடவடிக்கை… உ.பி. அரசு அதிரடி….

உத்தர பிரதேசத்தில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம். மாஸ்க்கை பயன்படுத்த தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என அம்மாநில கூடுதல் தலைமை செயலர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. அதேசமயம் உத்தர பிரதேசத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ்

உத்தர பிரதேசத்தில் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் அம்மாநில அரசு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள 15 மாவட்டங்களை வரும் 15ம் தேதி காலை வரை முழுமையாக சீல் வைத்துள்ளது. மேலும் மாநிலத்தில்  மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கூடுதல் தலைமை செயலர் அவனிஷ் அவஸ்தி

இது தொடர்பாக உத்தர பிரதேச கூடுதல் தலைமை செயலர் அவனிஷ் அவஸ்தி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், மாநிலத்தில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார். அம்மாநில முதன்மை சுகாதார துறை செயலர் அமித் மோகன் கூறுகையில், மாநிலத்தில் இதுவரை (நேற்று) கொரோனா வைரஸால் 343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.