மாஸ்க் அணிவதன் மூலம் உண்மையில் வைரஸ் தொற்றுகளை தடுக்க முடியுமா? – மருத்துவர்கள் விளக்கம்

 

மாஸ்க் அணிவதன் மூலம் உண்மையில் வைரஸ் தொற்றுகளை தடுக்க முடியுமா? – மருத்துவர்கள் விளக்கம்

முகமூடி அணிவதன் மூலம் உண்மையில் வைரஸ் தொற்றுகளை தடுக்க முடியுமா என்பது பற்றி மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

முகமூடி அணிவதன் மூலம் உண்மையில் வைரஸ் தொற்றுகளை தடுக்க முடியுமா என்பது பற்றி மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் மட்டுமில்லாமல் உலக நாடுகள் சிலவற்றிலும் இந்த வைரஸ் தலைகாட்ட தொடங்கியுள்ளது. சீனாவில் இருந்து செல்பவர்கள் மூலமாக மற்ற நாடுகளுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் வவ்வால்களை அதிகமாக உண்ணும் சீன கட்டுவிரியன் பாம்புகள் மூலம் கொரோனா வைரஸ் காய்ச்சல் உருவானதாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

ttn

இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிப்படைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காய்ச்சல் காரணமாக சீனாவில் உள்ளோர் முகமூடி அணிந்தே வெளியில் வருகிறார்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் குறித்தே மக்களிடையே பேச்சு எழுந்துள்ளது. மேலும் அச்சத்துடனே அங்குள்ள மக்கள் நாட்களை கடத்தி வருகின்றனர். இதனால் சீனாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நோய் பரவாமல் தடுக்கும் வகையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முகமூடி (மாஸ்க்) அணிந்து கொள்வதன் மூலம் உண்மையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள முடியுமா என்று மருத்துவ நிபுணர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்கள் முகமூடி அணிவதன் மூலமாக நமக்கு சுவாச நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை பெருமளவு குறைத்திட முடியும் என்று தெரிவித்துள்ளனர். அதில் ஃபுளூ, கொரோனா வைரஸ் போன்றவையும் அடங்குமாம். நோய்த் தொற்று ஏற்பட்டவர் இருமும்போது, தும்மும்போது காற்றில் எளிதாக நோய்த் தொற்று பரவும். அந்தக் காற்றை நாம் சுவாசிக்கும்போது நமக்கும் அவை எளிதாக பரவும்.

ttn

மேலும் அசுத்தமான இடத்தில் கையை வைத்து விட்டு கையை முறையாக கழுவாமல் நம்முடைய முகம், வாய், மூக்கு, கண்கள் ஆகிய உறுப்புகளில் அவர்கள் தொடும்போது நமக்கும் நோய்த் தொற்று எளிதில் பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க முகமூடிகள் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது அல்லது அவர்களுடன் ஆலோசிக்கும்போது முகமூடி அணிய வேண்டியது கட்டாயம் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எட்டு மணி நேரங்களுக்கு மேல் ஒரு முகமூடியை அணிவதை தவிர்க்க வேண்டும். அதேபோல அசவுகரியமான வகையில் முகமூடியை அணிந்திருக்க கூடாது. 20 நொடிகள் கைகளை சோப் கொண்டு கழுவி கூடுமானவரை கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் போன்ற டிப்ஸ்களை நோய்த் தொற்று காலங்களுக்கு அறிவுரையாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.