‘மாஸ்க், அடையாள அட்டை இருந்தால் தான் மது கிடைக்கும்’..,மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!

 

‘மாஸ்க், அடையாள  அட்டை இருந்தால் தான் மது கிடைக்கும்’..,மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!

காஞ்சிபுரம் ஆட்சியர் சில கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் மொத்த செலவுகளையும் அரசே ஏற்பதால், அரசுக்கு நிதி நெருக்கடி நிலவுகிறது. அதனால் கிட்டத்தட்ட 40 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  அதனால் கடை எப்போது திறக்கப்படும் என்று குடிமகன்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மது வாங்க வருபவர்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் சில கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ttn

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 16 கடைகள் மட்டுமே திறக்கப்படும் என்றும் குன்றத்தூரில் உள்ள மதுக்கடைகள் சென்னை காவல் நிலையத்தின் கீழ் வருவதால், அங்கு எந்த கடைகளும் திறக்கப்படாது என்றும் ஸ்ரீபெரும்புதூரிலும் சில்லறை விற்பனை கடைகள் திறக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மதுபானம் வாங்க வரும் நபர்கள் ஒருவருக்கொருவர் 6 அடி சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க், அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டு  உள்ளிட்டவற்றை காண்பித்து தான் மதுபானத்தை வாங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், முதலில் வரும் 50 நபர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்ட பிறகே, அடுத்த 50 பேருக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு மது வாங்க வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.