மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்! அடுத்தடுத்த அதிரடி!! 

 

மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்! அடுத்தடுத்த அதிரடி!! 

ரஜினியின் கட்சி அறிவிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் 5ம் தேதி சென்னையில் நடக்கிறது. 

ரஜினியின் கட்சி அறிவிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் 5ம் தேதி சென்னையில் நடக்கிறது. 

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது. சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை நாளை மறுநாள் சந்திக்கிறார் ரஜினிகாந்த். கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி எனச் சபதம் எடுத்து 3 வருடமாகிவிட்டது. இதன் தொடர்ச்சியில் சமீப நாட்களாகத் தனது அரசியல் நிலைப்பாட்டைத் தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்களைப் பேசி வருகிறார். அண்மையில்கூட குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, மத்திய அரசு குறித்தும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். மேலும் இஸ்லாமிய மத குருமார்களையும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடதக்கது,