மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் சென்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் – துரைமுருகன் கோரிக்கை

 

மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் சென்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் – துரைமுருகன் கோரிக்கை

கடந்த மாதம் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

கடந்த மாதம் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். தற்போது நடைபெற்றுவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 11 ஆம் தேதி முதல் தமிழக துறைகளின் மானிய கோரிக்கைகளுக்கான நடைபெற்று வந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை  நடைபெறவிருந்த சட்டபேரவை கூட்டத்தொடர்  வரும் 31 ஆம் தேதியோடு நிறைவடைவதாக  சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இதற்கிடையில் சட்டப்பேரவை கூடினால்தான் மக்களின் பிரச்னை தெரியுமென முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

duraimurugan

இந்நிலையில் சட்டமன்றத்தை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும் என துரைமுருகன் கோரிக்கை வைத்துள்ளார். மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் சென்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் எனக்கூறிய அவர், யாரும் வெளியே வராத போது  மக்கள் எவ்வளவு அச்சத்தில் உள்ளார்கள் என்பது நன்றாக தெரிகிறது என்றும், அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.