மால்களில் கிரெடிட் கார்டு பயன்படுத்துறீங்களா… இனி உஷாரா இருந்துக்கோங்க! லட்சக்கணக்கில் திருட்டு!

 

மால்களில் கிரெடிட் கார்டு பயன்படுத்துறீங்களா… இனி உஷாரா இருந்துக்கோங்க! லட்சக்கணக்கில் திருட்டு!

டிஜிட்டில் இந்தியா சுடர் விட்டு ஒளிர்ந்துக் கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், கடைகளில் கத்திரிக்காய் வாங்குவதற்கும் கூட கிரெடிட் கார்டு உபயோகிக்கும் சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில், ஸ்டைலாக பீட்சாவும், பர்கரும் ஆர்டர் செய்து விட்டு, மணிக்கணக்கில் பேசிக் கொண்டே கிரெடிட் கார்ட் வைத்து, கூடவே டிப்ஸ் வைக்கும் பழக்கமும் நம்ம ஊர் மக்களிடம் அதிகரித்து வருகிறது.

டிஜிட்டில் இந்தியா சுடர் விட்டு ஒளிர்ந்துக் கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், கடைகளில் கத்திரிக்காய் வாங்குவதற்கும் கூட கிரெடிட் கார்டு உபயோகிக்கும் சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில், ஸ்டைலாக பீட்சாவும், பர்கரும் ஆர்டர் செய்து விட்டு, மணிக்கணக்கில் பேசிக் கொண்டே கிரெடிட் கார்ட் வைத்து, கூடவே டிப்ஸ் வைக்கும் பழக்கமும் நம்ம ஊர் மக்களிடம் அதிகரித்து வருகிறது.

credit card

அப்படி செல்கிற இடங்களில் எல்லாம் ஸ்டைலாக கிரெடிட் கார்ட் கொடுத்து விட்டு, செல்போனில் மூழ்கி விடுகிற நம்ம ஊரு ஆசாமிகளுக்கான எச்சரிக்கை சம்பவம் தான் சமீபத்தில் ஜப்பான் நாட்டில் நடந்திருக்கிறது.
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோ அருகே இருக்கிறது கோட்டோ நகர். இந்த நகரில் செயல்பட்டு வரும் புகழ் பெற்ற மால் ஒன்றில் பணியாற்றி வருபவர் டனிகுச்சி. 34 வயதான இவர் அந்த மாலுக்கு அடிக்கடி வந்து செல்லும் வாடிக்கையாளர் ஒருவரின் கிரெடிட் கார்டு தகவல்களைப் பயன்படுத்தி 2,70,00 யென்கள் (சுமார் 1 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய்) மதிப்பிலான இரண்டு பேக்குகளை ஆன்லைனில் அவருக்குத் தெரியாமலேயே வாங்கியிருக்கிறார். பின்னர், அந்த பேக்குகளைத் தனது வீட்டு முகவரிக்கு அனுப்பியிருக்கிறார். கிரெடிட் கார்டு உரிமையாளர், தன்னுடைய கணக்கில் இவ்வளவு பெரிய தொகை தனக்குத் தெரியாமலேயே செலவழிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஆன்லைனில் வாங்கப்பட்ட பொருட்கள் டனிகுச்சியின் வீட்டு முகவரிக்குச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோட்டோ மாலில் பணியாற்றும் போது அங்கு கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துபவர்களைக் குறிவைத்து டனிகுச்சி இந்த மோசடியை அரங்கேற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

credit card

தனிப்பட்ட தகவல்களுக்கு எல்லையற்ற இணையவெளியில் பாதுகாப்பில்லை என்று பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை கொடுத்து வரும் இந்தச் சூழலில் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருட டனிகுச்சி பயன்படுத்திய ஐடியா `அடடே’ ரகம். வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த கிரெடிட் கார்டுகளை இவரிடம் கொடுக்கும் அந்தச் சில நிமிடங்களில் கார்டின் 16 இலக்க எண், அவர்களின் பெயர், ரகசிய குறியீட்டு எண், காலாவதியாகும் தேதி என ஆன்லைன் பயன்பாட்டுக்குத் தேவையான அத்தனை தகவல்களையும் டனிகுச்சி மனப்பாடம் செய்து வைத்துக் கொள்வாராம்.

இதே போல், 1,300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்களை மனப்பாடம் செய்து வைத்திருக்கும் டனிகுச்சி, அவற்றைப் பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்கள் வாங்குவார் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். இதையடுத்து அவரது வீட்டை சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அப்போது, பல்வேறு நபர்களின் கிரெடிட் கார்டு தகவல்கள் அடங்கிய நோட் புத்தகம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியிருக்கிறார்கள்.