மாற்று பாதையில் சென்றது விவசாயிகளா? செல்ல வைத்தது டெல்லி போலீஸா? – குழப்பத்தில் தலைநகர்!

 

மாற்று பாதையில் சென்றது விவசாயிகளா? செல்ல வைத்தது டெல்லி போலீஸா? – குழப்பத்தில் தலைநகர்!

டெல்லி காவல் துறை அனுமதித்த வழித்தடங்களில் மட்டும் டிராக்டர் பேரணியை நடத்த கட்டுப்பாடுகள் நடத்திய நிலையில், விவசாயிகள் சிலர் வேறு பாதைகளில் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் விவசாயிகள் மீது டெல்லி போலீஸ் தடியடி நிகழ்த்தியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் சங்கத்தினர் இன்று மாபெரும் டிராக்டர் பேரணியை டெல்லியில் மேற்கொண்டிருக்கின்றனர். இப்பேரணிக்கு ஆரம்பத்தில் அனுமதி மறுத்த டெல்லி போலீஸ், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது. அதில், பேரண்ணி சிங்கு, டிக்ரி உள்ளிட்ட பாதைகள் வழியாகவே நடைபெற வேண்டும் என்பது முக்கியமான கட்டுப்பாடு.

மாற்று பாதையில் சென்றது விவசாயிகளா? செல்ல வைத்தது டெல்லி போலீஸா? – குழப்பத்தில் தலைநகர்!

தற்போது இந்த பாதை விவகாரத்தில் தான் டெல்லி போலீஸுக்கும் விவசாயிகளுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. சில விவசாயிகள் குழுக்கள் அனுமதிக்கப்பட்ட பாதைகளை விடுத்து மத்திய டெல்லியை நோக்கி சென்றதால் போலீஸ் அவர்களை தடுத்துள்ளது. தடையை மீறி அவர்கள் நுழைந்ததால் தடியடி நடத்தப்பட்டுள்ளது. கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டது.

பாதையில் ஏற்பட்ட குழப்பமே இந்தத் தடியடிக்கு காரணம் என கூறப்பட்டாலும், அனுமதிக்கப்பட்ட பாதைகளில் சென்ற விவசாயிகளை போலீஸ் வேண்டுமென்றே வேறு புதிய பாதைகளில் செல்ல வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரணி நடைபெறுவதற்கு முன்பே அமைதியான முறையில் பேரணியை நடத்த அனைத்து விவசாய சங்கத்தினரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மாற்று பாதையில் சென்றது விவசாயிகளா? செல்ல வைத்தது டெல்லி போலீஸா? – குழப்பத்தில் தலைநகர்!

குறிப்பாக, சில விஷமிகள் நுழைந்து குந்தகம் விளைவிக்கலாம்; அனைவரும் பாதுகாப்பாக, அமைதியாக பேரணியில் கலந்துகொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தனர். அந்த விஷமிகள் தான் அனுமதிக்கப்படாத பாதை வழியாக விவசாயிகள் போல நடித்து டெல்லிக்குள் நுழைய முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.