மாற்று சான்றிதழில் அதிகாரத்தை காட்டிய கல்லூரி நிர்வாகம்: 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

 

மாற்று சான்றிதழில் அதிகாரத்தை காட்டிய கல்லூரி நிர்வாகம்: 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

குடும்ப காரணங்களுக்காக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காகச் சான்றிதழ்களை வழங்கும்படி, கல்லூரி நிர்வாகத்திடம் கோரியிருந்தார்

மாற்று சான்றிதழில் அதிகாரத்தை காட்டிய கல்லூரி நிர்வாகம்: 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கன்னியாகுமரி: மாற்றுச் சான்றிதழில் நன்னடத்தை திருப்திகரமாக இல்லை என குறிப்பிட்ட மருத்துவக் கல்லூரி பாதிக்கப்பட்ட மாணவருக்கு மாணவருக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று  நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் பாலசுந்தர்ராஜ் என்பவர் மருத்துவ முடித்துள்ளார். குடும்ப காரணங்களுக்காக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காகச் சான்றிதழ்களை வழங்கும்படி, கல்லூரி நிர்வாகத்திடம் கோரியிருந்தார். ஆனால்  அவர் கல்லூரி கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லை என்பதால் சான்றிதழ்களை வழங்க மறுத்தது.
இதையடுத்து பாலசுந்தர்ராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு தொடர்ந்ததையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, கட்டண பாக்கி 75 ஆயிரம் ரூபாயை செலுத்தி சான்றிதழ்களைப் பெற்றார்.

ஆனால் மாற்று சான்றிதழில் நன்னடத்தை திருப்திகரமாக இல்லை எனக் கல்லூரி நிர்வாகம் குறிப்பிட்டு வழங்கியுள்ளது. இதனால் தனது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கல்லூரிக்கு உத்தரவிடக் கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.தமிழ்வாணன், உள்நோக்கத்தோடு மனுதாரரின் நன்னடத்தை திருப்திகரமாக இல்லை என்று கல்லூரி நிர்வாகம் சான்றிதழில் குறிப்பிட்டது கண்டிக்கத்தக்கது இதனால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக 20 லட்சம் ரூபாய் கல்லூரி நிர்வாகம் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.