மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தாழ்தளப் பேருந்து இயக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

 

மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தாழ்தளப் பேருந்து இயக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

மக்களின் வசதியை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் பல பேருந்துகள் இயக்கபட்டு வருகின்றன.

மக்களின் வசதியை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் பல பேருந்துகள் இயக்கபட்டு வருகின்றன. சமீபத்தில் நூற்று கணக்கான சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், அதன் கட்டணம் அதிகமாக இருப்பதாக மக்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்ததை ஏற்றுக் கொண்ட அரசு, முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேருந்துகளின் கட்டணம் குறைக்கபட்டது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தாழ்தளப் பேருந்து இயக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

ttn

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தாழ்தளப் பேருந்துகள் இயக்கபடும் என்றும் 100கிலோ மீட்டர் உட்பட்ட பகுதிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.