மாறிமாறி நாமினேட் செய்துகொண்ட வனிதா – தர்ஷன்: களைகட்டும் பிக் பாஸ் வீடு!

 

மாறிமாறி நாமினேட் செய்துகொண்ட வனிதா – தர்ஷன்: களைகட்டும் பிக் பாஸ் வீடு!

கமலை சந்தித்த சேரன் பிக் பாஸ் அறிவிப்பின் பேரில் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

சென்னை:  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி 78வது நாளை தொட்டுள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் சேரன் நேற்று வெளியேறுவதாகக் கமல் அறிவித்தார். இதையடுத்து கமலை சந்தித்த சேரன் பிக் பாஸ் அறிவிப்பின் பேரில் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதைச் சற்றும் எதிர்பாராத சேரன் அதை ஏற்றுக்கொண்டு சீக்ரெட் ரூமுக்கு சென்றார்.

bb

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரொமோ  வீடியோ தற்போது ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘எவிக்ஷன்  பிராசஸில் தர்ஷன், எல்லாருடைய விஷயத்திலும் வனிதா மூக்கை நுழைப்பதாகக் கூறி அவரை  நாமினேட் செய்கிறார். அடுத்து முகின், சாண்டி  இருவரும் வனிதாவையே நாமினேட் செய்கின்றனர். இதையடுத்து வனிதா, தர்ஷனை நாமினேட் செய்கிறார்’ இவ்வாறு அந்த புரொமோ  வீடியோ முடிகிறது.  

 

ஏற்கனவே கவின் நாமினேட்டில்  நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டநிலையில், இந்த வாரம் வனிதா, கவின், தர்ஷன் உள்ளிட்டோர் நாமினேட் லிஸ்டில் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.