’மாறன்’ கதாபாத்திரத்தில் மிரட்ட வரும் விஷ்ணு விஷால்…காதலி ஜுவாலா உற்சாகம்!

 

’மாறன்’ கதாபாத்திரத்தில் மிரட்ட வரும் விஷ்ணு விஷால்…காதலி ஜுவாலா உற்சாகம்!

 இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் நடைபெற்றது. 

மைனா,  கும்கி, கயல் , தொடரி படங்களை இயக்கியவர் இயக்குநர்  பிரபு சாலமன். இவர் தற்போது காடன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் ராணா ஹீரோவாக நடிக்கிறார். மேலும்  விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு  இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் நடைபெற்றது. 

ttn

இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும்  ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் விஷ்ணு விஷாலுக்கென்று ஒரு தனி போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் அவர்  மாறன் என்றபெயர்கொண்ட யானை பாகனாக நடித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விஷ்ணு விஷால் முதன் முறையாக தெலுங்கில் கால் பதிக்கிறார். 

இப்படம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விஷ்ணு விஷால் காதலி ஜுவாலா குட்டா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘தமிழ் ரசிகர்களுக்கு உன் திறமை தெரியும். தற்போது தெலுங்கிலும் அதற்காக நான் காத்திருக்கிறேன்’என்று பதிவிட்டுள்ளார்.