மார்பகம் உடலில் ஓர் அங்கம் ; அது குறித்து பேச கூச்சப்படாதீர்கள்: நடிகை வரலட்சுமி அறிவுரை!

 

மார்பகம்  உடலில் ஓர் அங்கம் ; அது குறித்து பேச கூச்சப்படாதீர்கள்: நடிகை வரலட்சுமி அறிவுரை!

மார்பகம் பற்றி பேசக் கூச்சப்படாதீர்கள் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: மார்பகம் பற்றி பேசக் கூச்சப்படாதீர்கள் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

varalashmi

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய்  பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார். 

varu

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வரலட்சுமி, ‘மார்பகம் என்பது உடலின் ஓர் அங்கம் தான். மார்பகம் பற்றி பேசக் கூச்சப்படாதீர்கள். அதில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தாய் மற்றும் சகோதரியுடன் பேசுங்கள். புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடிய ஒன்று. அதனால் மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். நம் சமூகத்தில் மார்பகத்தை பற்றி பேசக் கூடாது என்ற மனநிலை இருக்கிறது. அது தவறு. ஆண்களுக்கு  உடலில் சில உறுப்புகள் இருப்பது போல பெண்களுக்கு மார்பகம் உள்ளது. அது உடலின் ஒரு அங்கம் என்பதை  நாம் புரிந்து கொள்ளவேண்டும்’ என்றார்.