மார்ச் 9 ஆம் தேதி ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருவிழா.. !

 

மார்ச் 9 ஆம் தேதி ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருவிழா.. !

கண்ணகியைப் போற்றும் இந்த விழாவின் போது லட்சக்கணக்கான பெண்கள் கூடிப் பொங்கல் வைப்பர்.

திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் இருக்கிறது. அந்த கோவிலில்  ஆண்டுதோறும் மலையாள மாதமான மகரம்-கும்பத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஆரம்பித்து 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். கண்ணகியைப் போற்றும் இந்த விழாவின் போது லட்சக்கணக்கான பெண்கள் கூடிப் பொங்கல் வைப்பர். அது பொங்கலா என்று அழைக்கப் படுகிறது.

ttn

கற்புக்கரசி கண்ணகி மதுரையைக் கொளுத்திய பிறகு, கொடுங்கல்லூர் போகும் வழியே  ஆற்றுக்கால் பகுதியில் தங்கியிருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூடுகின்றன. அதனால், இந்த திருவிழாவின் போது கண்ணகியைப் பற்றிய வாரலாறை சொல்லும்  “தோற்றம் பாடல்”  பாடப்படுகிறது. 

ttn

இந்த 10 நாட்களும் காப்புக் கட்டுதல், கண்ணகி பாட்டும், பொங்கல் நைவேத்தியம் உள்ளிட்ட பல சடங்குகள் நடைபெறும். இந்த  விழாவில் பொங்கல் வைக்க வரும் பெண்களின் எண்ணிக்கையைக் கொண்டு தான் இந்த திருவிழா உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. காலை 10 மணிக்கு ஆலயம் சார்பில் பக்தர்களின் அடுப்பில் தீ மூட்டப்பட்ட பின்னர், பெண்கள் பொங்கல் வைக்கத் தொடங்குவர்.

ttn

நிகழ்ச்சியின் இறுதியில் ஹெலிகாப்டரில் இருந்து பூமழை பொழியும். அந்த கண்கொள்ளாக் காட்சியைக் காணவே சில கூட்டம் வரும்.  கற்புக்கரசி கண்ணகி வடிவமாக இருக்கும் இந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் உள்ள அம்மனை கேரள பெண்கள், ஆட்டுக்காலம்மா என்று அழைக்கின்றனர். இந்த திருவிழா வரும் 9 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.