மார்ச் 31 ஆம் தேதி வரை மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து ரத்து!

 

மார்ச் 31 ஆம் தேதி வரை மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து ரத்து!

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அண்மையில் அழைப்பு விடுத்தார். இதையடுத்து இன்று பிரதமர் மோடியின் அழைப்புக்கு பணிந்த இந்திய மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர்.இதனால் நாட்டின் தேசிய சாலைகள், நகர சாலைகள், கிராம தெருக்கள் உட்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பேருந்து, ரெயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பேருந்து

தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. மார்ச் 31 ஆம் தேதிவரை தமிழக- கேரள- கர்நாடக எல்லை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் கொண்டுவரும் வாகனங்களுக்கு மட்டும் எல்லையில் அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.