மார்ச் 25-ம் தேதி புத்தாண்டு புத்தாண்டு கொண்டாடிய கதை தெரியுமா..!?

மார்ச் 25-ம் தேதி புத்தாண்டு புத்தாண்டு கொண்டாடிய கதை தெரியுமா..!?

ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு தினம் ஆகி 437 வருடங்கள்தான் ஆகின்றன. இப்போது உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வரும் காலண்டருக்கு கிரிகோரியன் காலண்டர் என்று பெயர். இதை 1582-ம் ஆண்டு பதின் மூன்றாம் கிரிகோரி என்கிற போப் அறிமுகம் செய்து வைத்தார்.

saint

அதற்கு முன் பின்பறப்பட்டது ஜூலியன் காலண்டர்.ரோமச்சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசர் அறிமுகம் செய்தது.அது மொசபட்டோனியர் பயன்படுத்தி வந்த காலண்டரில் மாதங்களின் பெயர்களில் சில மாற்றங்கள் செய்து ( ஜூலை – ஜூலியஸ் சீசர்,ஆகஸ்ட் – அகஸ்ட்டஸ் சீசர் ) உருவாக்கியது.அந்த காலண்டரில் பத்து மாதங்கள் தான் இருந்தன.மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதம்,ஆனால் மார்ச் 25 ம் தேதிதான் வருடத்தின் முதல்நாள் என்று கணக்கிட்டு வைத்திருந்தார்கள்.

raom

ஆகவே நமது புத்தாண்டு கொண்டாட்டங்கள் டிசம்பர் 31-ல் துவங்குகிறது. என்றாலும் இப்போதைய அறிவியல் படி நேரத்தைக் கணக்கிட்டால் முதலில் புத்தாண்டு பிறப்பது இந்தியப் பெருங்கடலில் இந்தோனேஷியா அருகில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவில்தான்.அமரிக்காவுக்குச் சொந்தமான இந்த 135 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுள்ள இந்தக் குட்டித்தீவில் புத்தாண்டுக் கொண்டாட்டம் துவங்கும்போது சென்னையில் டிசம்பர் 31 மாலை 3.30 ஆக இருக்கும்.

new year

அதே போல் உலகில் கடைசியாக புத்தாண்டு பிறப்பதும் அமெரிக்காவில்தான் .அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தின் அருகில் இருக்கும் பேக்கர்ஸ் தீவு என்கிற தனியாருக்குச் சொந்தமான தீவில்தான் கடைசியாக புத்தாண்டுக் கொண்டாட்டம் துவங்கும்.அப்போது நமது இந்திய நேரம் ஜனவர் 1-ம் தேதி மாலை 5.30 ஆக இருக்கும்.