‘மார்ச் 22 ஆம் தேதி பால் விநியோகம் இல்லை’ : தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் அறிவிப்பு!

 

‘மார்ச் 22 ஆம் தேதி பால் விநியோகம் இல்லை’ : தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் அறிவிப்பு!

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது. கேரளா, தமிழகம்,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வைரஸ் பரவியுள்ளது. இதனால் அனைத்து மாநில அரசும் மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். கொரோனா பரவிய எல்லா மாநிலங்களிலும் பள்ளி, வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 

ttn

கொரோனா குறித்து மக்கள் பீதியடைந்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களிடம் உரையாடினார். அதில், கொரோனா இந்தியாவுக்கு வராது என்று நினைக்க வேண்டாம். மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வெளியே வர வேண்டாம். முடிந்தவரை 22 ஆம் தேதி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும், 22 ஆம் தேதி சுய ஊரடங்கு முறையைப் பின்பற்றுவோம் என்றும் கூறினார். கொரோனாவை தடுக்கும் இந்த நடவடிக்கை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ttn

அதனால் பிரதமரின் உரையை ஏற்று, அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக வரும் மார்ச் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் பால் விநியோகம் செய்யப்பட மாட்டாது எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.