மார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு!

 

மார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு!

மார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

புதுடெல்லி: மார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி காலம், வருகின்ற மே மாத இறுதியுடன் நிறைவடைகிறது. ஆகையால், மே மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. 

இந்த தேர்தலில், பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என தேசிய அளவிலான முக்கிய எதிர்க்கட்சிகள் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. குறிப்பாக, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் போன்ற தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

e commission

இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடனும் தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியது. அந்த கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலுக்கு தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குச் சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதிகளை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 6 அல்லது 7 கட்டங்களாக இந்த தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.