மார்ச், ஏப்ரல் பிரீமிய தொகை செலுத்துவதற்கான காலஅவகாசம் 30 நாள் நீட்டிப்பு…… எல்.ஐ.சி. தகவல்….

 

மார்ச், ஏப்ரல் பிரீமிய தொகை செலுத்துவதற்கான காலஅவகாசம் 30 நாள் நீட்டிப்பு…… எல்.ஐ.சி. தகவல்….

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான பிரீமிய தொகைகளை செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 30 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக எல்.ஐ.சி. அறிவித்துள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் மக்கள் மனதளவிலும், பொருளாதார அடிப்படையிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சூழ்நிலையில், தனது பாலிசிதாரர்கள் எதிர்கொள்ளும் கஷ்டத்தை தணிக்கும் நோக்கில் பிரீமிய தொகைகளை செலுத்துவதற்கான கால அவகாசத்தை எல்.ஐ.சி. நீட்டித்துள்ளது. 

காலஅவகாசம்

இது தொடர்பாக எல்.ஐ.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  2020 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு பாலிசிதாரர்கள் செலுத்த வேண்டிய பிரீமியங்களுக்கான தொகைகளை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி மாதத்துக்கான பிரீமிய தொகை செலுத்துவதற்காக கருணை காலம் கடந்த 22ம் தேதி முடிவடைந்தது. இருப்பினும், இம்மாதம் 14ம் தேதி வரை பிப்ரவரி மாத பிரீமியம் செலுத்தலாம் என விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி.

நல்ல ஆரோக்கியத்திற்கான எந்த ஆதாரமும் இல்லாமல் பாலிசிகளை எங்கு வேண்டுமானாலும் புதுப்பிக்க முடியும். இது ஆன்லைனில் செய்யப்படும். எல்.ஐ.சி. பாலிசிதாரர்கள் டிஜிட்டல் பேமெண்ட் வழிமுறையில் எந்தவித சேவை கட்டணமும் இல்லாமல் பிரீமியத்தை செலுத்தலாம். பிரீமியம் செலுத்தவதற்காக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அடிப்படை விவரங்களை கொடுத்து நேரடியாக பிரீமிய தொகையை செலுத்தலாம். இவ்வாறு  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.