மார்க்கெட் போனது; தீவிர கிறிஸ்தவ மத பிரசாரத்தில் இறங்கிய ராமராஜன் – செந்தில்!

 

மார்க்கெட் போனது; தீவிர கிறிஸ்தவ மத பிரசாரத்தில் இறங்கிய ராமராஜன் – செந்தில்!

கரகாட்டக்காரனில் உச்சம் தொட்டு சினிமாவி 49 படங்களில் நாயகனாக நடித்தவர் ராமராஜன்.சில படங்களை இயக்கியும் இருக்கிறார். நடிகை நளினியை காதல் திருமணம் செய்துகொண்ட ராமராஜன் அதிமுகவில் இணைந்து எம்.பியும் ஆனார்.

கரகாட்டக்காரனில் உச்சம் தொட்டு சினிமாவி 49 படங்களில் நாயகனாக நடித்தவர் ராமராஜன்.சில படங்களை இயக்கியும் இருக்கிறார். நடிகை நளினியை காதல் திருமணம் செய்துகொண்ட ராமராஜன் அதிமுகவில் இணைந்து எம்.பியும் ஆனார்.

ramaraj

ஒரு காலத்தில் தமிழகத்தின் வருங்கால முதல்வர்களில் ஒருவராகவும் பேசப்பட்டவர் ராமராஜன்.அதன் பிறகு ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகி ஒதுக்கி வைக்கப்பட்ட ராமராஜன்,மனைவி நளினியையும் விவாகரத்து செய்து தனிமையில் வாழ்ந்து வந்தார்.புகழின் உச்சத்தில் இருந்தபோது  கோடிகளில் புரண்ட ராமராஜன், தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக பிரமுகர்கள் தரும் பணம் தவிர வேறு வருமானம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார்.அந்த சமையத்தில் 2010-ல் நடந்த ஒரு கார் விபத்தில் மோசமான காயமடைந்த ராமராஜன் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டாலும், தனிமையிலேயே இருந்து வந்தார்.

nalini

இந்த நிலையில் அவர் கோவையில் நடந்த கிறிஸ்தவ பிரச்சாரக் கூட்டத்தின் மேடையில் தோன்றி தேவசாட்சியம் அளித்திருக்கிறார். தான் கார் விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் 15 நாட்கள் சுய நினைவு இல்லாமல் இருந்தபோது தாம்பரத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் ஒரு கிறித்தவ மத  போதகரை அழைத்து வந்ததாகவும், அவர் தன் தலையில் கைவைத்து பிரார்த்தனை செயதபோது கர்த்தர் ஏசு கிறிஸ்த்துவே தன் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தது போல தோன்றியதாகவும் சாட்சியம் அளித்தார்.’ நீங்கள் வாழ்க்கையில் உங்கள் எதிர்காலம் குறித்து ஆயிரம் ரிசர்ச் செய்திருந்தாலும்,அது நிறைவேற சர்ச்சுக்குத்தான் போக வேண்டும்’ என்று பேசியிருக்கார்.

ramaraj

அடுத்தது அதே கரகாட்டக்காரன் வாழைப்பழக் காமெடி செய்து கவனம் ஈர்த்த செந்தில்,அவரும் ஊர் ஊராகச் சென்று தேவ ஊழியம் செய்துகொண்டு இருக்கிறார்.செந்தில் மேடையில் பளபளக்கும் நீல நிற சட்டையுடன் தோன்றி,’ என் சொந்தக்காரகள் பல பேர் கிறிஸ்த்துவ மதத்தில இருக்கிறார்கள். என் மருமகன் பெயர் நெப்போலியன், பேத்தி பேரு தாரா, இப்படிப்பாதி, அப்படிப்பாதி’ என்று பேச,மேடையில் இருக்கும் ஒரு போதகர் ‘ அய்யா கர்த்தர் யாருங்கையா ‘ என்கிறார்.’அவர்தான் உலக ரட்சகர்’ என்று செந்தில் முழங்குகிறார்.

senthil

அவர் தனது டிரைவரின் திருமணத்துக்கு காரைக்குடி போகும்போது செந்தில் சற்றே கண்ணயர்ந்து விட்டாராம்.கார் வயலில் இறங்கிவிட அதை நிறுத்துவதற்காக, பாலம், சுவர், டிரான்ஸ்போர்மர் மீதுதெல்லாம் இடித்து காரை நிறுத்த முயன்றாராம்.அங்கெல்லாம் நிற்காத கார் ஒரு சர்ச் வாசலில் வந்து நின்றதாம்.’ அப்பதான் என்னை ஏசப்பா அழைக்கிறார் என்று பேசுகிறார்.
ராமராஜனோ , கோயம்புத்தூர் போனா மருதமலை முருகன்,பழனி போனா தண்டாயுதபாணி முருகன்,மதுரை போனால் மீனாட்சி,திருப்பதி போனால் வெங்கடாசலபதி, ஆனால் உலகம் முழுவதும் இருக்கும் தெய்வம் கர்த்தராகிய ஏசு கிறிஸ்த்து என்று முழங்குகிறார்.ஆக கரகாட்டக்காரனில் ,இப்ப நாம வச்சிருக்கற இந்த காரை இதுக்கு முன்னாடி யாரு வச்சிருந்தா என்று காமெடி செய்த இவர்களை,காரை வைத்தே கவர்ந்து இருக்கிறார் ஏசு என்று தெரிகிறது. 

senthil

ஏற்கனவே ‘ மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க என்று முழங்கிய ஏ.வி.எம் ராஜன் இப்போது ‘ சினிமா என்கிற சாக்கடையில் ஒரு புழுவைப்போல உழல்ந்த என்னை கர்த்தர்தான் கரை சேர்த்தார் ‘ என்று பேசிக்கொண்டு இருக்கிறார். விரைவில் இந்த தேவ சாட்சியக் கூட்டங்கள் ஒரு ஸ்டார் நைட் நிகழ்ச்சி போல ஆகி விடுமோ!.