மார்கழி மாத ரிஷப ராசி பலன்கள்

 

மார்கழி மாத ரிஷப ராசி பலன்கள்

ரிஷப ராசிக்கு ஜோதிட அடிப்படையில் மார்கழி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

ரிஷப ராசிக்கு 8ல் சூரியனும்,சனியும்,10,11ல் செவ்வாயும்  6, 7ல் சுக்கிரனும்,7, 8ல் புதனும் 7-ல் குருவும் 3ல் ராகுவும்  9ல் கேதுவும் சஞ்சாரம் செய்கின்றனர். மார்கழி மாதத்தில் செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது.

rishabam

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்குப் பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். 

கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

risabaham

சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். வீண் அலைச்சலும் அதனால் மனச் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும்.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. 

வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். 

ரிஷப லக்ன பலன்கள்: சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரம் : வண்டி வாகனத்தில் கவனம் தேவை.

ரோகினி நட்சத்திரம்:  சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.  

மிருகசிரிஷ நட்சத்திரம் :  வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

சந்திராஷ்டம நாட்கள்:  ஜனவரி 5,6,7

risahbam

அதிர்ஷ்ட எண்கள் : 2,3,6,9

அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் மற்றும் வெள்ளி

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வெங்கடாசலபதி

பரிகாரம்: அருகில் உள்ள பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது நன்மை பயக்கும். அஷ்டமி தினத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும், செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.