மார்கழி மாத மேஷ ராசி பலன்கள்

 

மார்கழி மாத மேஷ ராசி பலன்கள்

மேஷ ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் மார்கழி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

மேஷ ராசிக்கு 9-ல் சூரியனும்,சனியும் 12-ல் செவ்வாயும், 7, 8-ல் சுக்கிரனும், 8, 9-ல் புதனும்,8-ல் குருவும், 4-ல் ராகுவும் ,10-ல் கேதுவும் சஞ்சாரம் செய்கின்றனர். மார்கழி மாதத்தில் செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது.

murugaa

மேஷ ராசிக்கு மாதப் பிற்பகுதியில் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும் உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும் ஆனால்,

தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும் சிலருக்குச் சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு  இருக்காது. 

மாத முற்பகுதியில் வாழ்க்கைத்துணையால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

mesham

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுமாரான நிலையே காணப்படும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். 

சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது. கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மாதப் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைக்கும்.

படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். 

மேஷ லக்ன பலன்கள்: தடைப்பட்ட சுப காரியங்கள் விரைவில் நடந்தேரும்.வாழ்க்கை துணையுடன் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தீரும்.

அஸ்வினி நட்சத்திரம் : வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

பரணி நட்சத்திரம்:  திருமண தடை நீங்கும்.

கார்த்திகை நட்சத்திரம் : வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

mesam

சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 2, 3, 4

அதிர்ஷ்ட எண்கள் : 4,7,9

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய், வியாழன்,

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிகப்பு

வழிபடவேண்டிய தெய்வம் : முருகன், துர்கை

பரிகாரம்: தினமும் காலையில் சூரிய வழிபாடு செய்வது மேன்மையான பலன்களை தரும். மேலும் அருகில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோயில்களுக்கு சென்றுவருவதும் நன்மை பயக்கும்.