மார்கழி மாத மிதுன ராசி பலன்கள்

 

மார்கழி மாத மிதுன ராசி பலன்கள்

மிதுன ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் மார்கழி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

மிதுன ராசிக்கு 7-ல் சூரியனும் சனியும் 9,10-ல் செவ்வாயும்  5, 6-ல் சுக்கிரனும் 6, 7-ல் புதனும் 6-ல் குருவும்  2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் சஞ்சாரம் செய்கின்றனர். மார்கழி மாதத்தில் செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது.

lakshmi

இந்த மாதத்தில் எதிரிகள் பணிந்து போவர்கள் அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டுச் சரியாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 

மாதத்தின் பிற்பகுதியில் உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சிறு தவறும் கூட சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடும். 

சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

bramma

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், மாதப் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது.

மாணவர்கள் மாத பிற்பகுதியில் படிப்பில்  ஆர்வம் அதிகரிக்கும். மிதுன ராசிக்காரர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.  

மிதுன லக்ன பலன்கள்: மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரம் : நினைத்தது நிறைவேறும் காலகட்டம்.

திருவாதிரை நட்சத்திரம்:  நீண்டநாட்களாக எதிர்நோக்கி இருந்த நல்ல தகவல் வந்து சேரும்.

புனர்பூசம் நட்சத்திரம் : சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள் :  ஜனவரி 7,8,9

அதிர்ஷ்ட எண்கள் : 3,5,7

natarajar

அதிர்ஷ்ட கிழமைகள் : புதன்,வெள்ளி 

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை 

வழிபடவேண்டிய தெய்வம்: துர்க்கை, முருகப்பெருமான்

பரிகாரம்: அருகில் உள்ள பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வது மேன்மை தரும் .

மேலும் வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதும் நன்மை தரும்.