மார்கழி மாத துலாம் ராசி பலன்கள்

 

மார்கழி மாத துலாம் ராசி பலன்கள்

துலாம் ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் மார்கழி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

துலாம் ராசிக்கு 3ல் சூரியனும் சனியும்  5, 6-ல் செவ்வாயும் 1, 2-ல் சுக்கிரனும் 2, 3-ல் புதனும் 2-ல் குருவும் 10-ல் ராகுவும் 4-ல் கேதுவும் அமர்ந்துள்ளனர். மார்கழி மாதத்தில் செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது.

thulam

துலாம் ராசிக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன்  மனைவிக்கிடையே  அன்னியோன்னியம் அதிகரிக்கும். 

சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சுபநிகழ்ச்சிகளைத் திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். 

thulam rashi palangal

இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதிர்ப்படும் மாதமாக அமையும்.உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். 

எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். 

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். 

thulam rashi palangal

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆனாலும் ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயன் தருவதாக இருக்கும்.
புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். 

துலாம் லக்ன பலன்கள்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

சித்திரை  நட்சத்திரம் : அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக் கூடும். 

ஸ்வாதி நட்சத்திரம் :  லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரம் : உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சந்திராஷ்டம நாட்கள் :  டிசம்பர் 20,21,22

அதிர்ஷ்ட எண்கள் :  1,7,9

thulaam rashi palngal

அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள்,புதன்,வெள்ளி 

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை 

வழிபடவேண்டிய தெய்வம்: விஷ்ணு,அம்பிகை 

பரிகாரம்: திங்கள்தோறும் சிவபெருமானுக்கு வில்வதளத்தால் அர்ச்சனை செய்வதும், சிவ ஸ்துதிகளைப் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

மேலும் விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, தும்பைப் பூக்களால் அர்ச்சனை செய்வதும் நன்மைகளைத் தரும்.