மார்கழி மாதத்தில் வீட்டின் வாசலில் பூசணிப் பூ வைப்பது ஏன்?

 

மார்கழி மாதத்தில் வீட்டின் வாசலில் பூசணிப் பூ வைப்பது ஏன்?

மார்கழி மாதத்தில் வீட்டின் வாசலில் பூசணி பூ வைபதர்கான ஆன்மீக காரணங்களை பற்றி பார்போம்.

மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி மாதம் ஆகும் அதனால்தான் கீதையில் மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம் என்று சொல்கிறார்கள் நம் முன்னோர்கள். 

posani

அத்தனை சிறப்புகள் வாய்ந்தது இந்த மார்கழி மாதம் ஆகும் . மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம். 

பீடு என்றால் ‘பெருமை’ என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி ‘பீடை’ என்றானது. 

அதுவரை இருந்த எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இது தான்.

மார்கழி மாதத்தில் கோலத்தில் பூ வைப்பதற்கும், சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பதற்கும் முன்னோர்கள் காரணங்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.

pumkin

அக்காலத்தில், திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை,பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல்யாண விளம்பரங்களோ கிடையாது.

எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள். ஒட்டு மொத்தமாக எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள்.

pumkins

மார்கழி மாத அதிகாலையில் வீதி பஜனையில் வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும். விவரத்தைப் புரிந்து கொள்வார்கள். தை மாதம் பிறந்த உடனே பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள்.

இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாயிலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள்.அதுபோலவே மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.