மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது?

 

மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது?

மார்கழி மாதத்தில் மட்டும் திருமணங்களை தவிர்ப்பதற்கான பல்வேறு காரணங்களை பற்றி பார்போம்.

மார்கழி மாதம் வரும் டிசம்பர் மாதம் பிற்பகுதியில் துவங்குகிறது. பூமியின் வடபாதி வட்டத்தில் இது உஷ்ணமாக இருக்க வேண்டிய காலம், ஆனால் அதிக குளிராக உள்ளது.

marriage

ஏனெனில் நமது கோளத்தின் வடபகுதியின் முன்புறம் சூரிய பார்வையின் நேர்கோணத்தில் இல்லை. பூமிக்கு சூரியன் மிக அருகில் இருக்கும் இந்நேரத்தில் சூரிய கதிர்கள் பூமியில் பட்டுத் தெறித்து விடுகின்றன.

பூமி இன்னும் சற்று விலகியிருந்தால் சூரியனின் வெப்பக் கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்கியிருக்கும். ஆனால் பூமி மிக அண்மையில் இருப்பதால் சூரிய கதிர்கள் தொடமுடியாத கோணத்தில் இருக்கிறோம். எனவே வெப்பமின்றி குளிர்ச்சி அதிகமாக இந்த மாதத்தில் இருக்கிறது.

marriage

ஏனைய மாதங்களில்  மூலாதாரத்தை நோக்கி இருக்கும் ஈர்ப்பு சக்தி (புவி ஈர்ப்பு விசை காரணமாக) மார்கழியில், பூமியில் வடபாதியில் இருக்கும் மக்களான நமக்கு குறைவாகவே இருக்கும். இப்போது விதை விதைத்தால் அது சரியாக முளைக்காது.

உயிர்சக்தி மந்தமாயிருக்கும். இக்கால கட்டத்தில் நம் உடம்பின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளவும், ஸ்திரமாக்கி சேமித்துக் கொள்ளவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

marriage

எனவேதான் இச்சமயம் திருமணங்கள் நடைபெறுவதில்லை. அதைத் தவிர்க்கும் நிலை தொடர்ந்து வருகிறது. கருவுறுவதற்கு ஏற்ற சமயம் இதுவல்ல. இல்லறத்தில் இருப்போர் இச்சமயம் புலனடக்கத்தை மேற்கொண்டு பாலுறவைத் தவிர்த்து வழிபாட்டில் கவனம் செலுத்துவதை மரபாகக் கொண்டுள்ளனர்.

சூரியசக்தி கீழ்நோக்கி செயல்படுவதால் மனநோயாளிகள் தங்கள் மனநிலையில் சமன்பாடு கொண்டுவருவதற்கு உகந்த நேரமும் இதுதான்.எனினும் சூரியன் நமது கோளுக்கு மிக அண்மையில் இருப்பதால் அதன் ஈர்ப்பு விசை மிக அதிகமாக நம்மைத் தாக்கும்.

marriage

இதனால்தான் மார்கழி மாதம் மனித உடலின் சக்தி மையம் கீழிருந்து மேல்நோக்கி ஈர்க்கப்படுகிறது. மார்கழிதான் மனித உடம்பில் சமநிலையையும் ஸ்திரத் தன்மையையும் கொண்டு வருவதற்கு உசிதமான நேரம் ஆகும்.

இதற்கான பிரத்தியேகமான யோகப் பயிற்சிகள் நமது கலாச்சாரத்தில் வடிவமைக்கப்பட்டு சொல்லி வைக்கப்பட்டன. இத்தகைய அறிவியல் காரணங்களால் தான் மார்கழி மாதத்தில் நம் முன்னோர்கள் திருமணங்களை தவிர்த்து வந்துள்ளனர்.