மார்கழி பௌர்ணமியும் அதன் மகத்துவங்களும்!

 

மார்கழி பௌர்ணமியும் அதன் மகத்துவங்களும்!

மார்கழி மாத பௌர்ணமி வழிபாடு மேன்மையான பலன்களை தரும் வழிபாடு ஆகும்.

தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ்ணர் இம்மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.

full moon day

இத்தகைய சிறப்புகளை பெற்ற மார்கழி மாத பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள‌ பழக்கமாகும். பௌர்ணமி தினத்தில் சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் சந்திரனை வழிபடுவதால் சகல நன்மைகளும் உண்டாகும். மேலும் மார்கழி மாதம் குரு பகவானுக்குரிய தனுசு ராசியில் பிறக்கிறது. 

full moon day

ஜோதிடத்தில் குரு பகவானின் உச்ச ராசியாக சந்திர பகவானுக்குரிய கடக ராசி இருக்கிறது. எனவே மார்கழி எனும் தனுர் மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் கோயிலுக்கு சென்று வழிபடுபவர்களுக்கு சந்திரன் மற்றும் குரு பகவான்களின் அருளும் கிடக்கிறது.

பௌர்ணமி தினத்தன்று பூஜை செய்வது அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது.

திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.

full moon day

மார்கழி பௌர்ணமி தினத்தில் வழிபடுபவர்களுக்கு உடல்,மனம், ஆன்மாவினால் செய்த பாவங்கள் இறைவனின் அருளால் நீங்கும் என்பது நம்பிக்கையாகும். 

மார்கழி திருவாதிரை நாளில் அம்பிகைக்கு வெண்ணிற ஆடை உடுத்தி தாமரைப்பூவால் அர்ச்சனையும் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதால் நமது வாழ்வில் சகல நன்மைகளையும் பெறலாம் என்று பல்வேறு ஜோதிட நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.