‘மாரி 2’ படத்தில் வரலட்சுமி சரத்குமார் கேரக்டர் போஸ்டர் வெளியீடு

 

‘மாரி 2’ படத்தில் வரலட்சுமி சரத்குமார் கேரக்டர் போஸ்டர் வெளியீடு

‘மாரி 2’ படத்தில் வரலட்சுமி சரத்குமார் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

சென்னை: ‘மாரி 2’ படத்தில் வரலட்சுமி சரத்குமார் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாரி’. பாலாஜி மோகன் இயக்கியிருந்த இப்படம் மாஸ் ஹிட்டானது. இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.

தற்போது, மீண்டும் தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. தனுஷ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர், வினோத் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் டொவினோ தாமஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

‘மாரி 2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தையும் போஸ்டராக வெளியிடுகிறது படக்குழு. முதலாவதாக, ஹீரோயின் சாய் பல்லவி கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. அராத்து ஆனந்தி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதையடுத்து, நடிகர்கள் கிருஷ்ணா, டோவினோ தாமஸின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜயா எனும் கதாபாத்திரத்தில், சட்டம் மற்றும் நீதித்துறை இணைச் செயலாளராக வரலட்சுமி நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமாரின் கேரக்டர் போஸ்டர் சமூக வலைதளங்களில் செம லைக்ஸ்களை அள்ளி வருகிறது.