‘மாரி 2’, தர லோக்கலா தனுஷ் எப்போ வரறார் தெரியுமா?

 

‘மாரி 2’, தர லோக்கலா தனுஷ் எப்போ வரறார் தெரியுமா?

தனுஷ் நடித்துள்ள ‘மாரி 2’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிச.21ம் தேதி ரிலீசாகவுள்ளது.

சென்னை: தனுஷ் நடித்துள்ள ‘மாரி 2’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிச.21ம் தேதி ரிலீசாகவுள்ளது.

‘மாரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘மாரி 2’ திரைப்படத்தை பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘மாரி 2’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிச.21ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும், வரலக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, அறந்தாங்கி நிஷா, வித்யா பிரதீப், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த ‘ரவுடி பேபி’ பாடல் ரிலீசாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது. தர லோக்கல் டானாக தனுஷை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.