‘மாரி 2’ டிரைலர் நாளை ரிலீஸ்: தர லோக்கலுக்கு ரசிகர்கள் உச்ச கட்ட எதிர்பார்ப்பு

 

‘மாரி 2’ டிரைலர் நாளை ரிலீஸ்: தர லோக்கலுக்கு ரசிகர்கள் உச்ச கட்ட எதிர்பார்ப்பு

தனுஷ் நடித்துள்ள ‘மாரி 2’ திரைப்படத்தின் டிரைலர் நாளை காலை வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்

சென்னை: தனுஷ் நடித்துள்ள ‘மாரி 2’ திரைப்படத்தின் டிரைலர் நாளை காலை வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

மாரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘மாரி 2’ திரைப்படத்தை பாலாஜி மோகன் இயக்குகிறார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும், வரலக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, அறந்தாங்கி நிஷா, வித்யா பிரதீப், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த ‘ரவுடி பேபி’ பாடல் ரிலீசாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிச.21ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘மாரி 2’ திரைப்படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.