மாரி பட இயக்குநரோடு கைகோர்த்த யோகி பாபு 

 

மாரி பட இயக்குநரோடு கைகோர்த்த யோகி பாபு 

நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடிக்கவுள்ள அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடிக்கவுள்ள அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. நகைச்சுவை நடிகராக வலம் வந்த இவர் தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்துள்ள கூர்கா, ஜாம்பி, தர்ம பிரபு உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளிவரவுள்ளது. 

இந்த நிலையில் இவர் ஹீரோவாக நடிக்கவுள்ள அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷின் மாரி பட இயக்குநர் பாலாஜி மோகன் முதன் முறையாக தயாரிக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். மண்டேலா என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் போஸ்ட்டரை அவர் வெளியிட்டுள்ளார். 
புதுமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

அந்த போஸ்டரில் யோகி பாபுவின் ஹேர் ஸ்டைல், சீப்பு, சவரக்கத்தி, கத்தரிக்கோல் போன்றவை கொண்டு அவரது முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தைப் பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.