மாயாவதியா, இந்திரா காந்தியா? – வித்யா பாலன் பதில் இதுதான்..!

 

மாயாவதியா, இந்திரா காந்தியா? – வித்யா பாலன் பதில் இதுதான்..!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோர் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இதுகுறித்து மனம் திறந்திருக்கிறார் வித்யா பாலன்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தி டர்ட்டி பிக்சர்’ மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் வித்யா பாலன். இந்த படத்தில் அவரது நடிப்பை பாராட்டி தேசிய விருது வழங்கப்பட்டது.

vidya

அதன்பிறகு அவர் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோர் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இதுகுறித்து மனம் திறந்திருக்கிறார் வித்யா பாலன்.

adsddv

நேற்று விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர், நான் இந்திரா காந்தி பற்றிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். நாங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்,  எப்படி வரும் என தெரியவில்லை என்றார்.

இந்த கதை திரைப்படமாக அல்லாமல் வெப் சீரிஸாக டிஜிட்டல் பிளாட்பார்ம் செல்வது பற்றி கேட்டதற்கு, திரைப்படத்தை விட வெப் சீரிஸில் வேலை அதிகம், மக்கள் வெப் சீரிஸோடு தங்களை அதிகமாக தொடர்புபடுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த வெப் சீரிஸை எடுக்க நீண்ட காலம் ஆகலாம். ஆனால் நான் அதில் நடித்தால், நிச்சயமாக நன்றாய் வரும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

DSVsvsv

மாயாவதி வாழ்க்கை வரலாற்று கதையில் வித்யா நடிப்பதாக கூறப்பட்டது உறுதி செய்யப்படாத செய்தி. அதுகுறித்து அவர் எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை.

adsdvs

இந்திய சினிமாவில் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் அதிகமாகி வருகிறது. பத்மாவதி, மணிகர்னிகா, ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என பல்வேறு திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளுக்குள் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் வெளியாக இருக்கிறது.

ACsdc

அதேபோல் வெப் சீரிஸில், Modi: Journey of a Common Man என்ற மோடியின் வாழ்க்கை வரலாற்று கதை சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள் அளவுக்கு வெப் சீரிஸுக்கும் ரசிகர்கள் அதிகமாகி வருகின்றனர்.

இதையும் வாசிக்க: நடிகர்கள் சண்டையில் லாபம் பார்க்கும் லேடி சூப்பர் ஸ்டார்! இத்தனை கோடி சம்பளமா?