மாம்பழம் வேண்டாம் ஆப்பிள் வேண்டும்; பாமக சின்னத்தை மாற்றிய திண்டுக்கல் சீனிவாசன்

 

மாம்பழம் வேண்டாம் ஆப்பிள் வேண்டும்; பாமக சின்னத்தை மாற்றிய திண்டுக்கல் சீனிவாசன்

பணத்துக்காக அமைக்கப்பட்ட கூட்டணி, மாங்கா மண்டியிட்டுவிட்டது என நெட்டிசன்கள் வறுத்தெடுத்த துயரில் இருக்கும் பாமகவினருக்கு மற்றுமோர் துயரமாய் இருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்.

அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பிரசாரம் செய்யப்போகும் இடங்களில் எல்லாம் பாமக சின்னத்தை மாற்றிக் கூறி வாக்கு கேட்கிறார். இதனால் ராமதாஸ் தரப்பு செம கடுப்பில் உள்ளனர்.

ஜ

பணத்துக்காக அமைக்கப்பட்ட கூட்டணி, மாங்கா மண்டியிட்டுவிட்டது என நெட்டிசன்கள் வறுத்தெடுத்த துயரில் இருக்கும் பாமகவினருக்கு மற்றுமோர் துயரமாய் இருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன். முன்பு திண்டுக்கல் தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ஆப்பிள் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாமகவினர், அது ஆப்பிள் இல்லை மாம்பழம் எனவும் சிரித்துக் கொண்டே மாற்றி பேசினார். அதற்கு நெட்டிசன்கள் செம கலாய் கலாய்த்தனர். இந்நிலையில் மீண்டும் அதே வேலையை செய்திருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்.

ஆ

திண்டுக்கல் அனுமந்த நகர், மாலைப்பட்டி, தோட்டனூத்து உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மாம்பழம் சின்னத்துக்கு பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு தவறுதலாக பேசினார். இது இரண்டாம் முறை என்பதால், வேட்பாளர் ஜோதிமுத்து முகம் வாடிப்போனது. எனினும் வேறு வழியின்றி பின்னர் சிரித்தபடியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் வாசிக்க: #DuraiMurugan நெருங்கி வரும் தேர்தல்: துரைமுருகன் வீட்டில் வருமானவரி சோதனை: மத்திய மாநில அரசுகளின் சதியா?