மாம்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் பயோ பிளாஸ்டிக்! 

 

மாம்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் பயோ பிளாஸ்டிக்! 

பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு தீர்வாகவும், மாற்றுப்பொருளாகவும் மாம்பழத் தோலிலிருந்து ‌பயோ பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

மாம்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் பயோ பிளாஸ்டிக்! 

மனிதனுக்கு சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி, பெருங்கடல்களில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளால் கடல்மாச‌டைவதுடன், கடல்வாழ் உயிரிழனங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு தீர்வாகவும், மாற்றுப்பொருளாகவும் மாம்பழத் தோலிலிருந்து ‌பயோ பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

மனிதனுக்கு சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி, பெருங்கடல்களில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளால் கடல்மாச‌டைவதுடன், கடல்வாழ் உயிரிழனங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் நெகிழிப் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினு‌ம் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க அதற்கு மாற்றாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு பொருள் தேவை. 

இதற்காக பிலிப்பைன்ஸில் உள்ள சான் கார்லோஸ் பல்கலைக்கழகத்தில் பயோ பிளாஸ்டிக் துறையில் பட்டப்படிப்பு படித்துவரும் டென்சிபல் மாண்டினோலா என்ற மாணவர், நெகிழிக்கு மாற்றுப்பொருள் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டார். அதன்படி,  கடல் பாசி மற்றும் மாம்பழ தோலைச் சேர்த்து பயோ பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளார்‌. இந்த பயோ பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதது, நீரில் கரையக் கூடியது என்கிறார் டென்சிபல். இதில் எந்த ரசாயனங்களும் கலக்கப்படவில்லை என்றும், பிளாஸ்டிக்கை போன்ற தன்மையுடன் இருக்கும் என்றும் கூறப்படுகி‌றது. 

USE AND THROW எனப்படும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்கை போன்று இருந்தாலும், நெகிழி போன்று பாதிப்பை ஏற்படுத்தாது என உறுதியாக நம்புகிறார் டென்சிபல் மாண்டினோலா