மாமியார் திருப்பி அனுப்பியது சீரா, சிக்கலா? பதறும் லல்லு மருமகள்.!

 

மாமியார் திருப்பி அனுப்பியது சீரா, சிக்கலா? பதறும் லல்லு மருமகள்.!

முன்னாள் பீஹார் முதல்வர் லல்லுப்பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ்.இவர் தனது தாய் ராப்ரி தேவியின் அமைச்சராக இருந்தவர். இப்போதும் பீஹார் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருக்கிறார். இவருக்கு 1970களில் பீஹார் முதல்வராக இருந்த துவாரகபிரசாத் ராயின் பேத்தியான ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து வைத்தார் லல்லு. ஐஸ்வரியா ராயின் தந்தை சந்திரிகா ராயும் ராஸ்ட்ரிய ஜனதாதள் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

Tej-prathap-yadav

லல்லுவின் மகன் தேஜ்பிரசாத் ஐஸ்வர்யா திருமணம் நீண்டநாள் நீடிக்கவில்லை. தேஜ் பிரசாத் திடீர் திடீர் என நாந்தான் சிவன் என்று சூலத்துடன் போஸ்கொடுத்தும் ,அடுத்த நாள் நானே ராதை என்று பெண்வேடம் இட்டு நான்தான் ராதை என்று பெண்வேடம் அணிந்து வீட்டுக்குள் வலம் வருவாரம். இதை கேள்விகேட்ட ஐஸ்வர்ய ராயை அவரது மாமியார் ராப்ரி தேவியும்,லல்லுவின் மகள் மிசாபார்தியும் தாக்கியதாக சாஸ்த்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார் ஐஸ்வர்யா. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா லல்லுபிரசாத் யாதவின் வீட்டில் இருந்து வெளியேறி தனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்த நிலையில் தனது மாமனார் வீட்டில் இருக்கும் தன் தாய்வீட்டு சீதனப் பொருட்களை மீட்டுத் தரும்படி ஒரு பெண்கள் அமைப்பில் புகார் செய்திருக்கிறார். 10 சர்குலர் ரோட்டில் இருக்குல் லாலுவின் வீட்டில் இருந்து 350 மீட்டர்தான் ஐஸ்வர்யா ராயின் தந்தை சந்திரிகா ராயின் வீடு.வியாழன் இரவு ராப்பிரி தேவி அனுப்பியதாக இரண்டு மினி லாரிகள் ,நிறைய பொருட்களை ஏற்றியபடி வந்து நிற்க பதறிப்போன ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் அவற்றை உள்ளே இறக்கி ஊள்ளே கொண்டுபோக கூடாது எனத் தடுத்து விட்டார்கள்.

dowri things

நாங்கள் கேட்டது ஐஸ்வர்யாவின் உடைகள்,நகைகள், அவள் விட்டுவிட்டு வந்த பணம் மட்டும்தான்.இப்போது அவர்கள் அனுப்பி இருக்கும் லாரியில் உள்ள பொருட்களை ஒரு மாஜித்திரேட் முன்னிலையில் பட்டியல் இட்டு கொடுத்திருக்க வேண்டும்.அதில் அவர்கள் எங்களை சிக்கலில் மாட்டி விடுவதறாக மதுபானங்கள் அல்லது போதை பொருட்களை வைத்திருக்கலாம். ஆகையால் , இவற்றை அனுமதிக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார் ஐஸ்வர்யாவின் தந்தை சந்திரிகா ராய்.இதுபற்றி கருத்துத் தெரிவித்து இருக்கும் லல்லுவின் மகள் மிசாபார்தி ‘ இதெல்லாம், வெறும் விளம்பர ஸ்டண்ட்,அவர்களுக்கு அப்படி சந்தேகம் இருந்தால்,அந்தப் பொருட்களை இறக்கும் போது வீடியோ எடுத்து இருக்கலாமே’ என்று சொல்லி இருக்கிறார். முதல்வர் மனைவியாக இருந்தாலும் முதல்வராகவே இருந்தாலும் இந்தியாவில் மாமியார் மருமகள் சண்டை தவிர்க்கவே முடியாதது என்று மறுபடியும் நிரூபணம் ஆகியிருக்கிறது.