மாமியாரை கவனிக்கவில்லை என்றால் மருமகளுக்குச் சிறை தண்டனை.. உஷாரா நடந்துக்கோங்க!

 

மாமியாரை கவனிக்கவில்லை என்றால் மருமகளுக்குச் சிறை தண்டனை.. உஷாரா நடந்துக்கோங்க!

மக்களவையில் மாமனார் மற்றும் மாமியாரை கவனிக்காத மருமகன் மற்றும் மருமகள்களுக்கு அபாரதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கப்படும் என்ற புதிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாமனார், மாமியாரைப் பார்த்துக் கொள்ளாமல் இக்காலத்தில் இருக்கும் பல பெண்கள் தனிக்குடும்பமாக வசித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், பல ஆண்டுகள் தன்னை வளர்த்த தாய், தந்தையை, மகன்களே அனாதை ஆசிரமத்தில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், இன்று கூடிய மக்களவையில் மாமனார் மற்றும் மாமியாரை கவனிக்காத மருமகன் மற்றும் மருமகள்களுக்கு அபாரதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கப்படும் என்ற புதிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

ttn

ஏற்கனவே, பெற்றோர்களைக் கவனிக்க முடியாத  மகன்கள் மற்றும் மகள்கள் பெற்றோர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு தொகை கொடுக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் மசோதா உருவாக்கப்பட்டது. அதில், பெற்றோர்களைப் பராமரிக்க முடியாத பிள்ளைகளுக்கு அவர்களது ஊதியத்திற்கு ஏற்றாற்போல பராமரிப்பு தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று புதிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை கடைப்பிடிக்க மறுப்பவர்களுக்கு மூன்று மாத காலம் சிறைத்தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்று சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டத்திற்கு பயந்தாவது, இனிமேல் பெற்றோர்களை அவர்களது பிள்ளைகள் ஒழுங்காகக் கவனித்துக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.