மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் சந்திப்புக்கு பலத்த பாதுகாப்பு…..!

 

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் சந்திப்புக்கு பலத்த பாதுகாப்பு…..!

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையோட்டி பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையோட்டி பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் சென்ற ஏப்ரல் மாதம் சீனா சென்றிருந்தபோது அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்-ஐ இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட  சீன அதிபர் ஷி ஐின்பிங் 3 நாள் அரசு முறை பயணமாக வரும் அக்டோபர் 11 ஆம் தேதி சென்னை வருகிறார். இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளம் உள்ளதால் இங்குதான் சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது

மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதனச் சின்னங்களை அவர்கள் பார்வையிட உள்ளனர். அதன்பின் இருநாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெறும்.சீன அதிபர் ஷி ஜின்பிங்

இதனையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்கள் இருக்கும் இடம், நுழைவு வாயில் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

மேலும் சுற்றுலா பயணிகளின் அடையாள அட்டைகளை வாங்கிப் பார்ப்பது, நுழைவு வாயிலில் வரும் வாகனங்களை கண்கானிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். 

மாமல்லபுரத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் பாதுகாப்புப் படை வீரர்கள் முழுக் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.