மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்திய நடன திருவிழாவுக்கு ரூ. 50 லட்சம் வழங்கிய தமிழக அரசு

மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்திய நடன திருவிழாவுக்கு ரூ. 50 லட்சம் வழங்கிய தமிழக அரசு

மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய நடன திருவிழாவுக்காக  மாநில அரசு சார்பில் 50 லட்சம் ரூபாயும், மத்திய அரசு சார்பில் 25 ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. 

மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய நடன திருவிழாவுக்காக  மாநில அரசு சார்பில் 50 லட்சம் ரூபாயும், மத்திய அரசு சார்பில் 25 ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் இருக்கும் பல வகையான நடனங்களை ஒரே இடத்தில் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரே திருவிழா மாமல்ல புரத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறும் இந்திய நடன திருவிழாவாகும். யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் முக்கிய சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தபசு பாறையின் முன் இது நடக்கிறது.

dance

பரதநாட்டியம், குச்சிபுடி, கதக்களி, பொய்க்கால் குதிரை, காவடியாட்டம் என பல்வேறு மாநிலங்களின் நடனங்கள் மற்றும் நாட்டுபுற கலைகளை ஒரே மேடையில் காணும் அறிய வாய்ப்பாக இந்த நடன திருவிழா அமையும். அதன்படி இந்த ஆண்டிற்கான நடன விழாவிற்காக மாநில அரசு சார்பில் 50 லட்சம் ரூபாயும், மத்திய அரசு சார்பில் 25 ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்படுள்ளது.