மாமன்னன் ராஜராஜ சோழனின் மரணத்தின் மர்மம்…மண்ணோடு புதைந்து போகுமா; வெளிச்சத்துக்கு வருமா!?

 

மாமன்னன் ராஜராஜ சோழனின் மரணத்தின் மர்மம்…மண்ணோடு புதைந்து போகுமா; வெளிச்சத்துக்கு வருமா!?

மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பழையாறையை அடுத்த ஒட்டத்தோப்பில் இந்திய தொல்லியல் துறை நடத்தும் ஆய்வு ராஜராஜ சோழனின் மரணம் குறித்த மர்மத்தை வெளிப்படுத்துமா?

மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பழையாறையை அடுத்த ஒட்டத்தோப்பில் இந்திய தொல்லியல் துறை நடத்தும் ஆய்வு ராஜராஜ சோழனின் மரணம் குறித்த மர்மத்தை வெளிப்படுத்துமா?அது ராஜராஜன் சமாதிதானா என்ற கேள்வி இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.

இந்திய மன்னர்களில் யாருக்கும் இல்லாத பெருமைகளைக் கொண்டவன் ராஜராஜ சோழன்.இந்தியாவில் மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசியா முழுவதும் புலிக்கொடியை பறக்க வைத்தவன் ராஜராஜன்.அவனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவனது மகன் ராஜேந்திரனும் சோழசாம்ராஜிய எல்லையை கங்கை கரையிலிருந்து கம்போடியா வரை விரிவு படுத்தினான்.

rajarajachola

கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகாலம் சோழ பேரரசின் வலிமை உச்சத்தில் இருந்தது.இதற்கு அடிகோலியவன் ராஜராஜ சோழன்.அவனைப்பற்றி ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள்,நூற்றுக்கணக்கான செப்பு பட்டயங்கள்,அவன் கட்டிய கோவில்கள்,அவன் கதையை சொல்லும் நாட்டிய நாடகம் எல்லாம் இருக்கின்றன.அவனைப்பற்றி நூற்றுக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டுவிட்டன.ஆனால்,ராஜராஜனின் தந்தையான சுந்தரச் சோழர் திருக்கோவிலூர் மகையமானின் மகளை மணந்ததால் ராஜராஜன் திருக்கோவிலூரில் பிறந்திருக்கக் கூடும் என்று யூகிக்கலாம்.ஆனால் அவன் இறந்தது எங்கே?

ராஜராஜனின் தந்தை சுந்தரச்சோழர்,இறுதிக்காலத்தில் உடல் நலிவுற்று காஞ்சியில் அவரது மூத்த மகன் கட்டிய பொன்மாளிகையில் இறந்ததால் அவரை ‘ பொன்மாளிகைத் துஞ்சிய தேவர்’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

rajarajachola

ராஜராஜனின் மகனான ராஜேந்திர சோழனும் 83 வயது வரை வாழ்ந்து காஞ்சியில் இருந்து கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் பயணத்தின் நடுவில் இறந்து போனான் என்று தெரிகிறது.ராஜேந்திரன் எரியூட்டப்பட்டது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள நட்டேரியை அடுத்த பிரம்ம தேசத்தில்.இதை அங்குள்ள கோவிலில் கல்வெட்டாக பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால்,ராஜராஜ சோழன் மரணம் ஏன் எங்குமே பதிவுசெய்யப்படவே இல்லை!?அதற்கு இரண்டே காரணங்கள்தான் இருக்க முடியும்.சோழர்கள் வாலீச பாசுபதம் என்கிற சைவ மதப்பிரிவை சேர்ந்தவர்கள்.இறந்தவர்களை புதைப்பதில்லை.உடலைத் தகனம் செய்து,சாம்பலை ஒரு செம்பில் இட்டு புதைத்து அதன்மேல் சதுர வடிவ மேடை அமைத்து,அதன் மேல் ஒரு சிவலிங்கத்தை வைத்து வழிபடுவார்கள்.ராஜராஜன் மனைவி பஞ்சவம் மாதேவிக்குக் கூட பழையாறை அருகில் அப்படி ஒரு நினவிடம் இருக்கிறது. 

rajendra chola

ஆனால்,அரனோ சாதாரண குடிமகனோ,கொலை செய்யப்பட்டாலோ, தற்கொலை செய்து கொண்டாலோ அவர்களது நினைவாக மண்டபமோ கோவிலோ அமைப்பது வழக்கமில்லை.

இலங்கை அரசனான மகிந்தனால் அனுப்பப்பட்ட ஒரு பெண் ‘புத்த துறவி’ பெரிய கோவிலின் எட்டாவது நிலையிலிருந்து ராஜராஜனைக் கீழே தள்ளி விட்டு கொலைசெய்தாக ஒரு கதை சொல்லப்படுகிறது.இதற்குச் சான்றாக ராஜேந்திரன் இலங்கைக்கு படை எடுத்துப்போய் மகிந்தனை வென்று இலங்கை மொத்தத்தையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்ததோடு,மகிந்தனை கைது செய்து கொண்டுவந்து பழையாறை அருகே,அவன் சாகும் வரை சிறைவைத்ததை சுட்டிகாட்டுகிறார்கள்.

rajarajachola

உடையாளூரில் உள்ளது ராஜராஜன் சமாதிதான் என்போர் சொல்லும் ஆதாரத்திலும் சாரமில்லை.அவர்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டதாகச் சொல்லும் பால் குளத்தம்மன் கோவிலில் இருக்கும் தூண் ஒன்றில் இருக்கும் கல்வெட்டுகளில் அவை ராஜராஜன் சமாதியிலிருந்ததாகச் சொல்லப்படவில்லை.

மாறாக முதலாம் குலோத்துங்கன் ( 1070-1120) இங்கே இருந்த  பழுதுபட்ட அரண்மனை முன் மண்டபத்தை செப்பனிட்ட செய்திதான் இருக்கிறது.
ஆகவே,சரித்திரம் சொல்ல மறந்ததை அல்லது மறைத்ததை இன்றைய அறிவியல் வெளிப்படுத்தினால் அதை வரவேற்க தமிழ்நாடே ஆவலுடன் காத்திருக்கிறது.

இதையும் வாசிக்க: பழந்தமிழர் கட்டிடக்கலை ரகசியங்கள்! வீடு கட்டும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!