மாமனார் படத்தில் 5 நிமிடம் நடிக்க இத்தனை லட்சம் சம்பளம் கேட்டாரா சமந்தா? 

 

மாமனார் படத்தில் 5 நிமிடம் நடிக்க இத்தனை லட்சம் சம்பளம் கேட்டாரா சமந்தா? 

நடிகை சமந்தா தனது மாமனார் படத்தில் 5நிமிடம் நடிக்க ரூ.35 லட்சம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: நடிகை சமந்தா தனது மாமனார் படத்தில் 5நிமிடம் நடிக்க ரூ.35 லட்சம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற படம் மன்மதுடு. தற்போது 17 ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மன்மதுடு 2 என்ற தலைப்பில் எடுத்து வருகின்றனர். இந்த படத்தை பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கி வருகிறார். 

rakul

இந்த படத்தில் நாகர்ஜுனா நடிப்பது மட்டுமின்றி அதன் இணை தயாரிப்பாளர்களில் ஒருவராக உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். மேலும் நாகர்ஜுனாவின் மருமகள் சமந்தா இதில் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார். இதற்காக வெளிநாட்டில் நடந்த படப்பிடிப்பில் சமந்தா கலந்து கொண்டார்.

இந்த நிலையில் அதில் வெறும் 5நிமிட காட்சியில் மட்டுமே நடிக்கவுள்ளார். ஆனால் அதற்கு சம்பளமாக 35லட்சம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை கேட்ட ரசிகர்கள் வெறும் 5 நிமிடத்திற்காக மாமனாரிடம் இத்தனை லட்சமா? கேட்பது என்று கடுமையாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.