மாபெரும் தலைகள் நின்ற,வென்ற மதுரை மக்களவை! அ.தி.மு.க-வின் கடைசி அஸ்திரம்! தி.மு.க ரியாக்சன்!?

 

மாபெரும் தலைகள் நின்ற,வென்ற மதுரை மக்களவை! அ.தி.மு.க-வின் கடைசி அஸ்திரம்! தி.மு.க ரியாக்சன்!?

மதுரையில் ஆரம்பமே களைகட்டிவிட்டது. தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.எம் பார்ட்டி, சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுதாளர் சு.வெங்கடேசனை வேட்பாளராக நிறுத்தி அமைதியாக தேர்தல் பணியை துவக்கி விட்டது.

வி.ஐ.பி தொகுதி – 2-மதுரை

மதுரையில் ஆரம்பமே களைகட்டிவிட்டது. தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.எம் பார்ட்டி, சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுதாளர் சு.வெங்கடேசனை வேட்பாளராக நிறுத்தி அமைதியாக தேர்தல் பணியை துவக்கி விட்டது.

அவர்களுக்கு அங்கே பெரிய பிரட்சினை ஏதுமில்லை. வழக்கமான கம்யூனிஸ்ட் ஓட்டும் தி.மு.க ஓட்டும் விழுந்தாலே சு.வெங்கடேசன் வெற்றியைத் தடுக்க முடியாது. அழகிரி தன் வலிமையைக் காட்ட ஏதாவது உள்ளடி வேலைகளில் இறங்கினால் மட்டும் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஸ்டாலினோடு அவருக்கு இருக்கும் முரண்பாடுகள் ஒரு பக்கம் இருந்தாலும் சு.வெங்கடேசன் கள பணிகள் பற்றி தெரியும் என்பதால் முட்டுக்கட்டை போடாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது!

எதிர்த்து நிற்கும் அ.தி.மு.க-விலோ உட்கட்சி பூசல் உச்சத்தில் இருக்கிறது. மேலூர்,மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு ஆகிய 5 தொகுதிகள் அடங்கியது மதுரை பாராளுமன்ற தொகுதி.

முக அழகிரி

பி.கக்கன், கே.டி.கே தங்கமணி, பி.ராமமூர்த்தி, சுப்பிரமணிய சாமி, பி.மோகன், மு.க அழகிரி என்று பல பெருந்தலைகள் நின்ற, வென்ற தொகுதி இது. கக்கன் தொடங்கி மோகன்வரை காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும் மட்டுமே மாறி மாறி வென்ற தொகுதி இது. 98 ல் சுப்பிரமணிய சாமியும், 2009ல் அழகிரியும் மட்டுமே விதி விலக்கு. மதுரை பாராளுமன்ற தொகுதியை அ.தி.மு.க வென்றதே கடந்த பாராளுமன்ற தேர்தலில்தான்.

raj sathyan

முதல் முறையாக மதுரையை வென்ற கோபாலகிருஷ்ணனுக்கு இந்த முறை சீட் இல்லை. அவருக்குப் பதிலாக முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யனை நிறுத்துகிறார்கள். அ.தி.மு.க-வின் ஐ.டி விங்கை நிர்வகித்துவந்த ராஜ் சத்யனுக்கு மதுரையை வாங்கிக் கொடுத்திருப்பது அமைச்சர் செல்லூர் ராஜு.

இது முதல் நாளிலேயே விரிசலை ஏற்படுத்திவிட்டது. மதுரை அ.தி.மு.க-வில்.கடந்த முறை வென்றவரும் தனது ஆதரவாளருமான கோபாலகிருஷ்ணனை நிறுத்த வேண்டும் என்று போராடிய அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு தோல்வியை ஜீரனிக்க முடியவில்லை.

udhayakumar

மதுரை மாவட்டதை மூன்றாக பிரித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை உதயகுமாருக்கு கொடுத்து இப்போதைக்கு சமாளித்து இருக்கிறார்கள். அதிலும் மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட எந்த சட்ட மன்ற தொகுதியும் உதயகுமாரின் கீழ் வராமல் கவனமாகப் பிரித்திருக்கிறார்கள். இது ஆர்.பி உதயகுமாரை மேலும் வெறுப்பேற்றி இருக்கிறது!

venkatesan

இப்போதைக்கு ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு அணி, அமைச்சர் உதயகுமாரின் அணி என்று இரண்டாக நிற்கிறது மதுரை அ.தி.மு.க.ராஜ் சத்யன் மேயர் மகன் என்பதைத்தவிர மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர். சு.வெங்கடேசன் இருபத்தைந்து வருடங்களாக களத்தில் இருப்பவர். ஜாதி ஓட்டுகள் என்று பார்த்தாலும் ராஜ் சத்யன் முக்குலதோர் பிரிவைச் சேர்ந்தவர். சு.வெங்கடேசன் நாயுடு, அவர் மனைவி செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்.

stalin, alagiri

இந்த இரு பிரிவுகள்தான் மதுரையில் பெரும்பான்மையான வாக்காளர்களின் ஜாதியாக இருப்பதால் இப்போதே ராஜ் சத்யன் வெல்ல வாய்ப்பே இல்லை என்கிறார்கள் மதுரையின் உள்வயனம் அறிந்தவர்கள். ஆனால், வெங்கடேசனிடம் இல்லாத ஒரு வலிமையான ஆயுதம் ராஜ் சத்யனிடம் இருக்கிறது. கடைசி நேரத்தில் செல்லூர் ராஜுவும் ராஜன் செல்லப்பாவும் டன் கணக்கில் பணத்தை இறக்குவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அதை தி.மு.க கூட்டணியும் சு.வெங்கடேசனும் எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.