மான்டேக் சிங் அலுவாலியா புத்தகத்தால் பதறும் காங்கிரஸ்…..மன்மோகன் சிங்கை தனது குரு மற்றும் வழிக்காட்டியாக ராகுல் காந்தி நினைக்கிறார்…. ராகுல் காந்திக்கு சொம்பு தூக்கும் காங்கிரஸ்….

 

மான்டேக் சிங் அலுவாலியா புத்தகத்தால் பதறும் காங்கிரஸ்…..மன்மோகன் சிங்கை தனது குரு மற்றும் வழிக்காட்டியாக ராகுல் காந்தி நினைக்கிறார்…. ராகுல் காந்திக்கு சொம்பு தூக்கும் காங்கிரஸ்….

மான்டேக் சிங் அலுவாலியா எழுதிய புத்தகம் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்மோகன் சிங்கை தனது குரு மற்றும் வழிக்காட்டியாக ராகுல் நினைக்கிறார். அவரை அவமரியாதை செய்ய வேண்டும் என ராகுல்காந்தியால் ஒரு போதும் நினைக்க முடியாது என காங்கிரஸ் விளக்கம் கொடுத்துள்ளது.

மத்திய திட்டக்குழுவின் துணை தலைவராக இருந்த அலுவாலியா எழுதிய  “Backstage: The Story behind India’s High Growth Years” என்ற புத்தகம் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அந்த புத்தகத்தில், 2013ல் குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்.பி., எம்.ஏல்.ஏ.க்கள்  மேல்முறையீடு செய்து  தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை வந்தால், சம்பளம் அல்லது ஓட்டளிக்கும் உரிமை இன்றி பதவியில் தொடரும் வகையில் அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இந்த அவசர சட்ட நகலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது ராகுல் காந்தி கிழித்தார். இதனால் மனமுடைந்த மன்மோகன் சிங் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய எண்ணினார் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மான்டேக் சிங் அலுவாலியா

இதனையடுத்து இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி விளக்கம் கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரனதீப் சுர்ஜிவாலா கூறியதாவது: குற்றவழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் அவசர சட்ட நகரை ராகுல் காந்தி கிழித்தது தைரியமான செயல். அவர்கள் இருவரும் (மன்மோகன் சிங், அலுவாலியா) என்ன ஆலோசனை செய்தார்கள் என எனக்கு தெரியாது. ஆனால் மன்மோகன் சிங்கை தனது குரு மற்றும் வழிகாட்டியாக ராகுல் காந்தி நினைக்கிறார்.

மன்மோகன் சிங்

ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் கட்சியோ மன்மோகன் சிங்கை அவமரியாதை செய்ய வேண்டும் என ஒருபோதும் யோசிக்க முடியாது. நகலை கிழித்தது பிரச்சினை அல்ல. ஆனால் சுத்தமான அரசியல் மற்றும் குற்றவாளிகள் அரசியல் இருக்க வேண்டுமா என்பதுதான் பிரச்சினை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.