மானியம் அல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.19 உயர்ந்தது…. மண்எண்ணெய் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரிப்பு…..

 

மானியம் அல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.19 உயர்ந்தது…. மண்எண்ணெய் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரிப்பு…..

மானியம் அல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.19 உயர்ந்தது. மண்எண்ணெய் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரிக்கப்பட்டது. விமான பெட்ரோல் விலை 2.6 சதவீதம் அதிகரித்தது. சர்வதேச சந்தையில் விலை உயர்ந்ததால் அவற்றின் விலை உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால் விமான பெட்ரோல் விலை மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. முந்தைய மாதத்தில் சர்வதேச சந்தையில் அவற்றின் விலை, அன்னிய செலாவணி விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மண்எண்ணெய் மீதான மானியம் நீக்கப்படும் வரை மாதந்தோறும் லிட்டருக்கு 25 காசுகள் உயர்த்த கடந்த 2016ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது மண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மண்எண்ணெய்

மும்பையில் மண்எண்ணெய் விலை  லிட்டருக்கு 26 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. மானியம் அல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 19 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் ரூ.695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 14.2 கிலோ எடை கொண்ட மானியம் அல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தற்போது 714 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

விமான எரிபொருள்

விமான பெட்ரோல் விலை ஆயிரம் லிட்டருக்கு ரூ.1,637.25 அல்லது 2.6 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.64,323.76 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தற்போது விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் செலவினம் மேலும்  அதிகரிக்கும்.