மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 சரிவு – பொதுமக்கள் மகிழ்ச்சி

 

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 சரிவு – பொதுமக்கள் மகிழ்ச்சி

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மார்ச் மாதம் ரூ.50 வரை சரிந்துள்ளது.

சென்னை: மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மார்ச் மாதம் ரூ.50 வரை சரிந்துள்ளது.

கடந்த மாதம் 14.2 கிலோ எடையுள்ள மானியமில்லா சிலிண்டர் விலை சுமார் ரூ.150 உயர்த்தப்பட்டது. சர்வதேச எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மானியமில்லா சிலிண்டரின் விலை கூடும் அல்லது குறையும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் ஏற்கனவே கூறியுள்ளார். அதன்படி சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

ttn

இந்நிலையில், மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மார்ச் 1 முதல் ரூ.50 வரை குறைவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.55 குறைந்து 826 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது பொதுமக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.