மானம் போச்சு… பாலியல் பலத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு அபராதம் விதித்த பஞ்சாயத்து!

 

மானம் போச்சு… பாலியல் பலத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு அபராதம் விதித்த பஞ்சாயத்து!

சட்டீஷ்கர் மாநிலத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மானம் போய்விட்டது என்று கூறி கிராம பஞ்சாயத்து அபராதம் விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்தீஷ்கர் மாநிலம் ஜஸ்புர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளம் பெண் ஒருவர் குடும்பத்தில் சண்டைபோட்டுவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் ஊரைச் சேர்ந்த சந்தீப், கிஷோர் வந்து அந்த பெண்ணிடம் ஆறுதல் கூறியுள்ளனர்.

சட்டீஷ்கர் மாநிலத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மானம் போய்விட்டது என்று கூறி கிராம பஞ்சாயத்து அபராதம் விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்தீஷ்கர் மாநிலம் ஜஸ்புர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளம் பெண் ஒருவர் குடும்பத்தில் சண்டைபோட்டுவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் ஊரைச் சேர்ந்த சந்தீப், கிஷோர் வந்து அந்த பெண்ணிடம் ஆறுதல் கூறியுள்ளனர். அவருக்கு வேலை வாங்கித் தருவதாக நம்பிக்கை கூறியுள்ளனர். அருகில் ஒரு இடத்தில் கட்டிட வேலை இருப்பதாகவும், வந்தால் நிறைய பணம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.

women

இதை நம்பி அந்த பெண்ணும் அடுத்தநாள் அங்கு சென்றுள்ளார். அங்கு கட்டிட வேலை எதுவும் நடைபெறவில்லை. மறைந்திருந்த சந்தீப், கிஷோர் அந்த பெண்ணை பிடித்துக்கொண்டனர். அந்த இடத்தில் வைத்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
வீடு திரும்பிய மகளின் கோலம் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய், நடந்ததைக் கேட்டுள்ளார். அவரிடம் அழுதபடி வேலை வாங்கித் தருவதாக கூறி கிஷோர், சந்தீப் செய்த செயலைப் பற்றி கூறியுள்ளார். இதனால், உடனடியாக அவரை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றார் அந்த பெண்ணின் தாய். போலீஸ் நிலையத்தில், புகார் எழுதிக்கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதனால், பயந்துபோன தாயும் மகளும் ஊர் பெரியவர்களிடம் பேசிவிட்டுவருவதாக கூறி வந்துவிட்டனர். 
இந்த விஷயம் பற்றி ஊரில் அவர்கள் எதுவும் பேசவில்லை. ஆனால், இந்த விவகாரம் ஊர் முழுக்க பரவியது. இதனால், ஊர் பஞ்சாயத்தும் கூடியது. விசாரணையில் கிஷோர், சந்தீப் செய்தது உண்மைதான் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.  அடுத்ததுதான் மேலும் கொடுமை… பஞ்சாயத்துக்குத்  தெரியாமல் போலீஸ் நிலையம் சென்றதால், ஊரின் மானம் கெட்டுப்போய்விட்டது என்று கூறி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கும் ரூ.5000 அபராதம் விதித்தனர்.

women harassment

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு பஞ்சாயத்து அபராதம் விதித்தது மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதைத் தொடர்ந்து சோம்பல் முறித்த போலீசார், புகார் வரவில்லை என்றாலும் கூட கிஷோர், சந்தீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தண்டனை அளித்த பஞ்சாயத்து தலைவர்களையும் தேடி வருகின்றனர்.