மாநில கட்சிஅந்தஸ்தை இழக்கிறதா பாமக? தொண்டர்கள் கலக்கம்?!

 

மாநில கட்சிஅந்தஸ்தை இழக்கிறதா பாமக? தொண்டர்கள் கலக்கம்?!

தேர்தல் தோல்வியால் பாமக மாநில கட்சி அந்தஸ்தைப் பறிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தேர்தல் தோல்வியால் பாமக மாநில கட்சி அந்தஸ்தைப் பறிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த மக்களவை தேர்தலில் பாஜக – அதிமுக  கூட்டணியில் இடம்பெற்ற பாமகவுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் மண்ணை கவ்வியது. இதே போல் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து களம்கண்ட அந்த கட்சி அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. இதன் மூலம் தேர்தலில் 5% மட்டுமே வாக்குகளை பெற்றிருந்தது. 

ramadoss

பொதுவாக ஒரு கட்சி மாநிலக் கட்சியாக நீடிக்க வேண்டுமென்றால் சட்டமன்றத் தேர்தலில் 6 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் குறைந்தது 2 தொகுதியில் வெற்றிபெற வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அந்த கட்சியானது மாநில  கட்சி அந்தஸ்தை இழக்கும்.

EC

இந்நிலையில் இதுகுறித்து பாமகவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தோடுராஷ்டிரிய லோக் தளம், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மக்கள் ஜனநாயகக் கூட்டணி, மிசோரம் மக்கள் மாநாடு உள்ளிட்ட கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ramadoss

தமிழகத்தில் ஏற்கனவே தேமுதிக மாநில கட்சி அந்தஸ்தை  இழந்துள்ள நிலையில் பாமகவும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பாமகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.