மாநில அளவில் பப்ஜி…முதல் பரிசு 1 லட்சம்: கடும் எதிர்ப்பால் நிகழ்ச்சிக்குத் தடை!

 

மாநில அளவில் பப்ஜி…முதல் பரிசு 1 லட்சம்:  கடும் எதிர்ப்பால் நிகழ்ச்சிக்குத் தடை!

25 குழுக்கள் விளையாட வேண்டும் என்றும் 24 குழுக்கள்  இறுதி போட்டியில் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் மாநில அளவில் நடைபெறவிருந்த பப்ஜி போட்டி எதிர்ப்பின் காரணமாக நிறுத்தப்பட்டது.

காரைக்குடி மற்றும் கல்லல் நகர்களில் அன்னை மொபைல்ஸ்  இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர்கள்  செளந்தர நாயகி உடனுறை சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி மாத திருவிழாவையொட்டி மாநில அளவில் பப்ஜி போட்டி  நடத்தப்போவதாக அறிவித்தனர்.  மார்ச் 5ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்ட இந்தப் போட்டியில் காலையில் 9 மணி முதல் இரவு வரை விளையாட வேண்டும். 4 பேர் என 600 குழுக்கள் வீதம் 2500 பேர் விளையாடலாம் என்றும்  அரை மணிநேரத்தில் 25 குழுக்கள் விளையாட வேண்டும் என்றும் 24 குழுக்கள்  இறுதி போட்டியில் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்தனர்.

ttn

 மேலும் முதல் பரிசு  ஒரு லட்சம் ரூபாய் லட்சம் என்றும் 2வது பரிசாக 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 3வது பரிசாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் இதை பணமாகவும், பொருட்களாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.  இந்த அறிவிப்பு கிராம மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  

ttn

இந்நிலையில் இளைஞர்களை அடிமையாக்கி அவர்களின் உயிரைப் பறிக்கும் பப்ஜி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளையாட்டுப் போட்டியை தடை செய்ய வேண்டும் என்று பலரும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் தற்போது இந்த  போட்டியானது  ரத்து செய்யப்பட்டுள்ளது .