மாநில அரசுகள் நேரடியாக மாஸ்க், வென்டிலேட்டர், கருவிகள் வாங்க தடை! – மத்திய அரசு அதிரடி

 

மாநில அரசுகள் நேரடியாக மாஸ்க், வென்டிலேட்டர், கருவிகள் வாங்க தடை! – மத்திய அரசு அதிரடி

மாநிலங்கள் தனித்தனியாக என்95 மாஸ்க், பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ கருவிகளை வாங்கக் கூடாது என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளன.
கொரோனா பரவி ஆரம்பித்ததுமே வட மாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்கள் முன்னெச்சரிக்கையாக செயல்படத் தொடங்கின. மாஸ்க் வாங்குவது, வென்டிலேட்டர் வாங்குவது என்று தீவிரமாக செயல்பட்டன. மத்திய அரசு உடனடி கொரோனா கண்டறியும் பரிசோதனை கிட்டை வாங்குவதற்கு முன்பே தமிழ்நாடு அரசு ஆர்டர் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், வென்டிலேட்டர் உள்ளிட்ட பல கருவிகளை வாங்க மாநில அரசுகள் ஆர்டர் கொடுத்திருந்தன. இதனால், மத்திய அரசுக்கு கருவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ventilator

இந்தநிலையில் மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் இனி நேரடியாக மாஸ்க், வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளை வாங்கக் கூடாது. இவற்றை மத்திய சுகாதாரத் துறையே வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும்.
சில மாநிலங்கள் தேவைக்கு அதிகமான வகையில் அத்தியாவசிய கருவிகளை வாங்கி வைத்துள்ளதாகவும் ஆனால் களநிலை பணியாளர்கள் அந்த பாதுகாப்பு கருவிகள் இன்றி அவதியுறுவதாகவும் தகவல் வந்துள்ளது. மாநில அரசுகள் அனைவருக்கும் பாதுகாப்பு கருவிகள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சில மாநிலங்கள் வென்டிலேட்டர் கருவிகள் செயல்படாமல் இருக்கின்றன. அவற்றை சரி பார்த்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.